சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-12 இந்திரன்

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-12

இந்திரன் தமிழ்க்கடவுளே!!! வேதம் தமிழருடையதே!!!



ஆம், 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'
என்கிறது தொல்காப்பியம்.

ரிக் வேதத்தில் அதிகமான பாடல்களில் புகழப்படுபவர் இந்திரனே ஆவார். ஆரிய?! இந்திரனுக்குத் தமிழன் சோழர்கள் 28 நாள் விழா எடுத்தனரே (சிலப்பதிகாரம்).



ஆக
தமிழரும் வடவரும் ஒரே சமயத்தவரே
வேதசமயத்தவரே

இன்றும் நேபாளில் இந்திரவிழா கொண்டாடப்படுவதே அதற்குச் சான்று.

மேலும் போரில் இறந்தோர்க்கு வீரசுவர்க்கம் கிட்டும் என்பது பாரத தேசத்தின் வெகு மக்களின் நம்பிக்கை.

கீழுள்ள புறநானூற்றுப் பாடல் இந்திரன், வீரசுவர்கம் பற்றிய குறிப்பையும் தருகின்றது.

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே (புறநானூறு-241)

இதன் பொருள்:-

வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது. ஆய் அண்டிரன் இறந்ததையும் அவனுடன் அவன் மனைவியரும் இறந்ததையும் கண்ட புலவர் ஆய் அண்டிரன் மறு உலகம் அடைந்ததாகவும் அங்கு இந்திரன் அவனை வரவேற்பதாகவும் குறிப்பிடுகிறார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்