சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-9 பலதேவர்

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-9

இன்று அநேகமாக இஸ்கான் கோவில்களில் மட்டுமே சங்கக் காலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பழந்தமிழ் தெய்வங்களான கிருஷ்ணனும், பலராமனும் இணைந்து உள்ளனர்.



திருமாலிஞ்சோலையில் (அழகர்கோவில்) திருமாலோடு பலராமன் கோயில் கொண்டுள்ளான் என்கிறது பரிபாடல் (15).

கபிலர் நற்றிணையில் (32) குறிஞ்சித்திணை பாடலில்

"மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி"

என்று திருமாலுடன் (மலை போன்ற கரும்பச்சை நிறமுடையவன்) வெள்ளருவி நிறமுடைய பலராமனையும் குறிப்பிடுகிறார்.

ஒருகாலத்தில் தமிழகத்தில் புகழ் பெற்றிருந்த பலராம வழிபாடு இன்று இல்லாத போதிலும்...

தமிழ்ப் பெயர்களான 'வெள்ளையன்', வெள்ளைக்கண்ணு, வெள்ளைச்சாமி, மதுரை வட்டாரங்களில் வழங்கப்படும் உலக்கையன், முத்துலக்கையன் போன்றவை பலராமனைக் குறிப்பவை

இப்பெயர்கள் இன்றளவும் வழங்கப்பெறுவது பலராம வழிபாடின் மிச்சமே.

ஆக, பாரத தேசம் முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுவது தமிழரிடமிருந்து பரிணமித்த சனாதனதர்மமே.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்