சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-3 த்ரிபுராந்தகர்

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-3

இந்து புராணங்கள் என்பவை ஆரியர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை என ஆங்கிலேயர்கள் உளறிச் செல்ல, அதையே உண்மையென நம்மவர்களும் நம்பிவிட்டனர்.

ஆனால் நம் தமிழ் முன்னோர் இயற்றிய சங்க இலக்கியங்களில் புராணச் செய்திகள் ஏராளமாக உள்ளன, இதன்மூலம் புராணங்கள் நமக்கு அந்நியமானவை என்ற சிந்தனை உடைக்கப்படுகிறது. இதோ ஆதாரம்-

சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

வானிடத்தில் பறந்து திரியும்
இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட
நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன்
சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.
இச்செய்தி பரிபாடலில

    மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
   மாதிரம் அழல எய்து
             - (பரி.5, 25-27)

இதில் மிக முக்கியமானது அசுரருக்கு வரம் தரும் சிவபெருமானே அசுரரை அழித்த செய்தியாகும். இதன்மூலம்  அசுரர் என்பது  தமிழரைக் குறிப்பிடுவது என்ற விஷப் பிரச்சாரமும் முறியடிக்கப்படுகிறது.அப்படி இருந்தால் தமிழர்கள் வதைக்கப்பட்டதைப் பெருமையாக தமிழ்ப்புலவர்கள் பாடியிருப்பார்களா?

#புராணங்கள்_தமிழனுடையது
#அசுரர்கள்_தமிழரல்லர்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்