சங்கத்தமிழ் காட்டும் சைவ-வைணவ ஒற்றுமை -11

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-11






இந்து என்கிற பெயர் காலத்தால் பிந்தியது...இந்து என்கின்ற மதமே இல்லை என்றெல்லாம் சிலர் கூறிவருகின்றனர். இந்து எனும் சொல் குறித்த ஆய்வு இப்போதைக்குச் செய்யப்போவதில்லை..அது அடுத்த பகுதியில் பாப்போம். சைவமும் வைணவமும் உள்ளடக்கிய வேதநெறியும், தாய்தெய்வ வழிபாடும், நடுகல் போன்ற வீரவழிபாடுகளும், தமிழர் சமயமாக இருந்தன. இவை மொத்தமாகவே இந்து என்கிற பொதுச் சொல்லால் அறியப்பட்டன என்பது பொதுவான புரிதல்.

இந்துமதத்தின் பெரும் பகுதிகள்..(பிரிவுகள் அல்ல) சைவம் மற்றும் வைணவம் ஆகும்.சைவ வைணவ பூசல் சங்கக்காலத்தில் இல்லை. பக்தி இயக்கம் தோன்றி செழித்த பின் சிற்சில பூசல்கள் தோன்றின. ஆனால் பிற்கால நாயகர்கள் ஆட்சியில் அவையும் மறைந்தன. சிதம்பரத்தைத் தன் குலநாயகம் என்று போற்றிய அதே சோழர் தான் குலதனமான ஸ்ரீரங்கநாதருக்கு உலகின் மிகப்பெரிய செயல்படும் கோவிலைக்கட்டினர். அதேபோல் நங்கசோழன் என்னும் தீவிர விஷ்ணு பக்தன் மஹாலக்ஷ்மித் தாயாரையே தன் மகளாகப் பெற்றார். கமலவல்லி என்று பெயரிட்டு அவரை அரங்கனுக்கே மணமுடித்தார்.ஆகவே அரங்கன் சோழர்களின் மருமகன் ஆனார்.

அதேபோல சங்கக்காலத்தில் சைவ வைணவ ஒற்றுமை சிறந்ததே விளங்கியது

இதோ ஆதாரம்-

ஐந்தலை உயிரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ! பரிபாடல் 1: 46,47.                      

பொருள் : ஐந்து தலைகளையும், உயர்ந்த தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த ஆற்றலையும், வலிமையையும் உடைய சிவபெருமானும் நீயே . உலகங்கள் ஒடுங்கும் இடமும் திருமாலாகிய நீயே ’’. திருமலைப் பாடுகின்ற புலவர் அந்தணர்களின் அறமாகவும், சூரியனாகவும் சந்திரனாகவும் ப்ரஹ்மனாகவும் ஏன் சிவனாகவும் இருப்பவர் திருமாலே என்று வியக்கிறார்.

எனவே  இப்பாடலில் சிவபெருமானின் உருவில் இருப்பவனும் திருமாலே என்ற கருத்தைச்  சங்கத்தமிழ்ப் புலவர் வெளிப்படுத்துகிறார்.
ஆக, நாம் நம் முன்னோர் வழியில் சிவனுருவில் திருமாலையும், மால் உருவில் சிவபிரானையும் காண்போம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்