சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-6 முருகன்

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-6

ஆறாவது பதிவு ஆறுமுகன் பற்றியது.



ஆரிய முருகன்

முருகன் தமிழ்க்கடவுள், பிற்காலத்தில் ஆரிய அரிதாரம் பூசப்பட்டு திருமாலின் மருகனாக, ஆரிய இந்திரனின் மகள் தேவசேனாவின் பதியாக ஆக்கப்பட்டார் என்ற சிலரது கூற்றைத் தவிடு பொடி ஆக்குகிறது இந்த பரிபாடல்.

திருப்பரங்குன்றம் பற்றிய வர்ணனை இது.

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் கரும்பு கருமுகக்கணக்கு அளிப்போரும்
தெய்வப் பிரமம் செய்குவோரும்
கைவைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளிகுரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகியல் விளம்புவோரும்
கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப
ஊழுற முரசின் ஒலி செய்வோரும்
என்றூழ் உற வரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவாரும்
இரதி காமன் இவன் இவள் எனாஅ

விரகியர் வினவ வினாவிறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும்
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டறிவுறுத்தவும்
நேர்வரை விரியறை வியலிடத்திழைக்கச்
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு…”

இப்பாடலில் ஆரியர்களது அடையாளமாகக் காட்டப்படும் வேள்வி, இந்திரன், ரதி- காமன், அகலிகை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 பரிபாடலில் இன்னொன்று சொல்கிறது. குன்றம்பதனார் இயற்றிய ஒன்பதாம் பாடல் அது. செவ்வேளின் மனைவியைப் பற்றி குறிப்பிடும் போது அவள் இந்திரன் மகள் என்பதைக் குறிக்க
“ஐயிரு நூற்று மெய்ந்நயனத்தவன் மகள்” என்று சொல்கிறது.

இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் கண்களை உடையவன் என்ற குறிப்பு அகலிகைக் கதையில் இந்திரன் பெற்ற சாபத்தைக் குறிக்கிறது.

ஆகவே, இடையில் வந்த ஆரிய புரட்டு என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவை அனைத்தும் தமிழர் மெய்யியலே!!!

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்