எந்நாட்டவர்க்கும் இறைவன் எம் முருகன்!!!

முருகப் பெருமான் தமிழருக்கு மட்டும் கடவுள் அல்ல...இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர் வணங்கப்படுகிறார்! 

வங்காள முருகன் 



உதாரணமாக வங்காளத்தில் துர்கா பூஜையின் போது முருகனை வணங்குவர்! அங்கு கார்த்திகேயன் என்ற பெயர் அவருக்கு!




முருகன் கிரேக்க, ரோமானியர்க்கும் தலைவனா?

சங்க இலக்கியங்கள் முருகனை வெற்றியின் தெய்வமாகக் காட்டுகின்றன. சம்ஸ்கிருத இலக்கியங்களும் முருகனை அசுரர்களை வெல்ல வந்தவன் என்றும், தேவர்களின் சேனாதிபதி என்றும் குறிப்பிடுகின்றன. முருகன் போர்த்தெய்வமாக காட்டப்படுகிறார், தீயிலிருந்து தோன்றியராகவும், ஜோதிடத்தில் செவ்வாயின் அதிபதியாகவும் காட்டப்படுகிறார். செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி, மேஷம் என்பது ஆடாகும், சில ஆலயங்களில் முருகனுக்கு ஆடு வாகனம் காட்டப்படுகிறது. முருகன் இந்துமதத்தின் ப்ரதான தெய்வமான சிவனது மகன். அவரது நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வந்த சிவந்த மேனியன் என்கின்றன புராணங்கள்.

அதேபோல் கிரேக்க தெய்வம் ஏரிஸ் (ஆங்கிலத்தில் மேஷ ராசியை ஏரிஸ் என்பர்) ஜீயுஸ் எனும் தலைமைக்கடவுளின் மகன். (ஜீயுஸ் என்பது ஜூபிடர்- வியாழனைக் குறிக்கும். நமது புராணங்கள் செவ்வாயை குருவின் மகன் என்கின்றன). ஏரிஸ் போர் தெய்வமே, சிவந்த மேனியனே.

அதேபோல், ரோமானிய மார்ஸ்- செவ்வாய் தலைமைக் கடவுள் ஜூனோவின் மகன், போர் கடவுளாவான்.
இவற்றை ஆராயும்போது நமது முருகனையே அவர்களும் வெவ்வேறு வடிவில் வணங்கினர் என்பதை அறியலாம்.


புத்தமதத்திலும் முருகன்

புத்தரின் போதனைகள் மதமாக வளர முனைந்தோது, இந்தியாவிலிருந்த பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ள நேர்ந்தது. அவ்வகையில் போதிசத்துவ ஸ்கந்தர் என்ற பெயரில் சீன பௌதர்களால் வணங்கப்படும் கந்தனின் படம் இது.



பண்டைய ஜாவா தீவில் கார்த்திகேயா

பண்டைய ஜாவா தீவில் யுத்தக் கடவுள் எனப்படும் கார்திகேயரைக் குறித்த அதிகமான செய்திகள் இல்லை. அபூர்வமாகவே அவரைப் பற்றிய செய்திகள் உள்ளன. அப்படி கிடைத்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அவருடைய ஒரு சிலையில் அவர் மயில் மீது அமர்ந்தவண்ணமும் மார்பில் போட்டுக் கொள்ளும் பூணூல் அணிந்து உள்ளதைப் போலவும் காட்சி தருகின்றது.

இவரைப் பற்றி செய்திகள், 1082 மற்றும் 1372 ஆம் ஆண்டுகளை சேர்ந்த படக் லாவாஸ் (Padag Lawas) மற்றும் நோம்ஹ் நியூமரா (Nomh Numarra) என்ற இரண்டு பழங் காலத்திய புத்தமதக் கட்டிடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் கிடைத்து உள்ளன.

வட நாட்டு அரசர்களின் நாணயங்களில் முருகன்

பல்வேறு சம்ஸ்கிருத இலக்கியங்களில் முருகன் குறிப்பிடப்படுகிறார். அதே போல் பல வட நாட்டு அரசர்களின் நாணயங்களில் முருகன், மயில் சின்னம் உள்ளது. உதாரணமாக கனிஷ்கர் காலத்திய, குப்தர் காலத்திய நாணயங்களைக் கூறலாம்.

ராமாயணத்தில் பால காண்டத்தில் ஸ்கந்தனின் பிறப்பில் அக்னி பகவானின் பங்கைக் குறிப்பிட்டு உள்ளது. ராமாயணத்தின் ஒரு பதிப்பில் ஸ்கந்தனை சிவபெருமானின் புதல்வர் என்று கூறினாலும், அதில் அக்னியின் பங்கையும் குறிப்பிட்டு உள்ளது. கார்த்திகேயா என்ற பெயர் பெற்றதின் காரணம் கிருத்திகைகள் என்பது அனைவருக்கும் தெரியும். ராமன் காட்டிற்குச் சென்றபோது அவர் அங்கு பாதுகாப்புடன் இருக்க ஸ்கந்தனின் அருளை கௌசல்யா வேண்டுகிறாள். அகஸ்தியரின் குடிலில் இருந்த பூஜை அறையில் கார்த்திகேயர் மற்றும் பிற கடவுட்களும் பூஜிக்கப்பட்டதான குறிப்பும் உள்ளது. மேலும் ஸ்கந்தன் ஒரு மாவீரர், மஹாசேனா, அவருடைய ஆயுதம் சக்தி, வாஹனம் மயில், அவருடைய பெயர் குஹா மற்றும் குறுன்சா மலையை உடைத்தது போன்ற குறிப்புக்கள் வால்மீகி ராமாயணத்தில் காணப்படுகிறது.






கம்போடியாவின்க்கள்ல்வெட்டு பலவற்றில் கீழ் கண்ட கடவுட்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
ஆதித்தா அல்லது ஆதித்ய ஸ்வாமி
பிரம்மா
கணேஷா
சாலிக்ராம ஸ்வாமி
யமா
ஒன்பது நவக்கிரகங்கள்
ஸ்வயம்பூவா
இந்திரா
ஸ்கந்த கார்த்திகேயா
7 ஆம் நூற்றாண்டு முதலே ஸ்கந்த கார்த்திகேயா காம்போடியாவில் அறியப்பட்டு உள்ளார். அங்கு வந்த அங்கோரியர்களின் காலத்துக்கு முன்னரே மயில் மீது அமர்ந்துள்ள நிலையில் உள்ள ஸ்கந்த கார்த்திகேயாவின் சிலைகள் காணப்பட்டன.


நமது குமரக் கடவுளையே சீனரும் வணங்கினர்


சீனாவின் ஷின்ஷி மாகாணத்தின் அருகில் உள்ள தடாங் என்ற இடத்தில் உள்ள யுங்கங் என்ற மலைப் பகுதியில் குகையின் எட்டாம் வாயிலில் அனைவரையும் கவரும் அற்புதமான ஒரு ஆண் சிலை காணப்படுகின்றது. 

மயில் மீது அமர்ந்து, ஆறுமுகங்களுடன் (ஒருமுகம் பின்புறம் மறைந்துள்ளது), உள்ள இச்சிலையை குமாரபூதா, மஞ்சுஸ்ரீ, மஞ்சு குமாரா முதலிய பெயர்களால் குறிக்கின்றனர்.நமது குமரக் கடவுளையே சீனரும் வணங்கினர்.




பண்டைய ஈரானியர் கந்தனையே வணங்கினர்.

பழங்காலத்தில் ஈரானியர்கள் ஸ்ரவ்ஸா என்ற பெயரில் நமது ஸ்கந்தனை வணங்கினர்.ஈரானிய புராணங்களில் படி ஸ்ரவ்ஸா அசுரர்களைக் கொன்றவர், அழகு, இளமை, வெற்றி ஆகியவற்றைக் குறிப்பவர். இவரது விருப்பப் பறவை சேவல், அப்படியே நம் முருகனைப் போல் இல்லை? பண்டைய ஈரானியர் கந்தனையே வணங்கினர்.


மேற்கு வங்கத்தின் கார்த்திகேயர்.

மேற்கு வங்கத்தில் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படும் விழாக்களில் செழுமையான அறுவடை நடைபெற அருள் புரியும் கடவுளாகவே முருகன் கார்த்திகேயக் கடவுள் வணங்கப்படுகிறார். தேவர்களின் படைத் தலைவனாக இருந்து தாரகாசுரனை அழித்தவர் என்று புராணங்களில் கூறப்படும் கடவுளைப் போன்றவரே மேற்கு வங்கத்தின் கார்த்திகேயர். 

அறுவடை முடிந்தவுடன் கொண்டாடப்படும் பண்டிகையான 'பவுஷ்' என்பதை டிசம்பர் - ஜனவரி மாதத்தில் வங்கத்தில் கொண்டாடுகிறார்கள். அந்த நேரத்தில் பெரிய திருவிழா மற்றும் கேளிக்கைகள் நடைபெறுகின்றன. புதிதாக அறுவடை செய்த அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்து ஜனவரி மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 'புஷ்ப சங்கராந்தி' என்ற பெயரில் வீட்டில் உள்ள பெண்கள் அதற்கு பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். அது போலவே முதல் அறுவடையின் போதும் அந்த தினத்தை புனித நாளாகக் கொண்டாடி இனிப்புக்கள் மற்றும் கார வகை பண்டங்களை செய்து குழந்தைகளுக்கு தருகிறார்கள்.

கார்திகேயப் பெருமான் வழிபாட்டில் வயதான மற்றும் இளம் பெண்கள் பங்கேற்கின்றார்கள். அந்த வழிபாட்டில் நன்கு பயிற்சிப் பெற்ற வயதான மூதாட்டிகள் அல்லது பெண்கள் தலைமையில் கூடும் இளம் பெண்கள் சில சடங்குகளை செய்கிறார்கள்.
கார்த்திகேய ஒருமுறை அந்த சடங்கை செய்யத் துவங்கி விட்டால் அந்த சடங்கை துவக்கிக் கொண்ட பெண்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த சடங்குகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். ஆனால் அந்த சடங்குகள் எளிமையாக அமைந்துள்ளன.

தமது வயல்களில் அறுவடைநல்லமுறையில் நடக்க வேண்டும், தடங்கல் இன்றி செழுமையாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டப் பின் துவக்கப்படும் அந்த சடங்குகள் நல்ல முறையில் நடைபெற வேண்டுமே என்ற ஒருவித மனக் கலக்கத்துடன் நடத்தப்படுகின்றன. வழிபாட்டு தினத்தில் சடங்கு துவங்கும் முன் அறுவடை செய்த நெல்லை ஒரு மண் பாத்திரத்தில் நிரப்பி அந்த மண் பாத்திரத்தை ஈரமான அரிசி மாவினால் கோலமிட்ட இடத்தின் மீது வைத்து , மண் பாத்திரத்தின் மீது சோழிகள், முளை விட்ட தானியங்கள், நுனிக் கரும்பு, அந்த பருவத்தில் கிடைக்கும் கறிகாய்கள், பழ வகைகள் மற்றும் உலர்ந்த பாக்குகள் போன்றவற்றை கட்டி வைத்து அலங்கரித்தப் பின் பூஜைகளை துவக்குவார்கள்.

அலங்கரிக்கப்பட்ட அந்த மண் பாத்திரங்களை களிமண்ணால் செய்யப்பட்ட கார்த்திகேயர் போன்ற உருவச் சிலைக்கு முன்னால் வைத்து, இரவு முழுவதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும் வகையில் நெய் விளக்கை அதன் முன் ஏற்றி வைப்பார்கள். அந்த மண் பொம்மைக்குப் பின் புறத்தில் ஒரு மரத் தடியை நட்டு வைத்து அதில் பழங்கள், காய்கள், பாக்குகள் மற்றும் வாழை எலுமிச்சம் பழங்களை கட்டி வைத்து இருப்பார்கள். பண்டிதர் வந்து முக்கிய பூஜைகளை ஆரம்பித்து மாலைக்குள் பூஜையை முடித்து வைப்பார். அந்த வழிபாட்டில் கலந்து கொள்ளும் பெரும்பாலோர்கள் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களே. விரதம் இருக்கும் பெண்கள் இரவு முழுவதும் அந்த மண் பொம்மைக்கு முன்னால் கண் விழித்து அமர்ந்தபடி நாட்டுப் பாடல்களைப் பாடியபடி இருப்பர்.



இவை இன்றைய ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலைகள்.

















Comments

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்