Posts

சங்கத்தமிழில் சூரசம்ஹாரம்-22

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-22 சனாதனதர்மத்தில் விழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அதிலும் தீமைகளின் உருவகமான அசுரர்களைத் தெய்வங்கள் வென்ற நாட்களும் கொண்டாடப்படுகின்றன. நரகாசுரனை வென்ற நாள் தீபாவளி என்றால் சூரனை முருகன் வென்ற நாள் சூரசம்ஹார விழாவாகும். சூரனை முருகன் வென்ற வரலாறு அகநானூற்றில் 59வது பாடலில் உள்ளது. ..' சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்     சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து...' அதாவது திருபரங்குன்றத்தை 'சூரனை வென்ற முருகன் சினம் தணிந்து எழுந்தருளிய இடமென்று' சங்கநூல் அகநானூறு கூறுகிறது. ஆக, அசுரர்களைத் தமிழர் எனக் கூறுவதே ஏற்புடையதல்ல. மேலும் சனாதனதர்மமானது பாரத தேசம் முழுவதும் ஒன்றுபோலவே பரவி இருந்தது. முருகனைப்பற்றி வடமொழி புராணங்களான 'ஸ்கந்தபுராணம்', 'வாயுபுராணம்' முதலிய புராணங்கள் கூறும். மஹாபாரத வனபர்வத்தில் ஸ்கந்தன் எனும் முருகனின் வரலாறு கூறப்படுகிறது. முருகனின் வரலாற்றை காளிதாசர் வடமொழியில் 'குமாரசம்பவம்' எனும் நூலாக இயற்றினார். குப்தர் காலத்தில் முருக வழிபாடு வட இந்தியாவில் ப்ரபலம். குமாரக...

சங்கத்தமிழில் ஹோலிப் பண்டிகை -21

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-21   holi festival in sangam literature   காமன்பண்டிகை_எனும்_ஹோலி     சனாதனதர்மமானது இன்றளவும் பல்வேறு இன்னல்களைக் கடந்து நிற்பதற்குக் காரணம்... சனாதனம் என்பது வாழ்வியல் நெறியாக இருப்பதே ஆகும். வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கொண்டாடி, மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாக மாற்றியே சனாதனதர்மம் இன்றளவும் நிலைத்துள்ளது. காமம் என்பதும் காதல் என்பதும் மனித வாழ்வின் முக்கிய அம்சமே ஆகும். தமிழர்கள் இவற்றை கொண்டாடவே செய்தனர். பல்வேறு கோவில்களில் காம சிற்பங்களைக் கடந்தே உள் செல்கிறோம். ஏனெனில் இவற்றைக் கடந்தாலே நாம் வீடுபேறு பெற இயலும். பங்குனி மாத பௌர்ணமி காமன் (மன்மதன்) விழாவாக, பங்குனி முயக்கமாக சங்கத்தமிழன் கொண்டாடினான். அன்றைய காதலர் தினம் அது.  இதனை சோழநாட்டினர் பங்குனி விழாவாகவும் சேரநாட்டினர் உள்ளி விழாவாகவும் கொண்டாடினர் என்பதை “கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே” - (நற்றிணை: 234: 6 - 8) என நற்றிணை சொல்கிறது. ...

சங்கத்தமிழில் அருந்ததி -20

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் -20 sangathamil kaatum sanathana dharmam. sanathana dharma in sangam literature. THE SCIENTIFIC FACTS ABOUT ARUNTHATHI STAR. அருந்ததி வசிஷ்டர் பார்ப்பதன் அறிவியல் சனாதனதர்மமானது சங்கக்காலத் தமிழரின் வாழ்வியலில் வேரூன்றி, இன்றும் பாரம்பரியம் மாறாமல் எழுந்து நிற்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் இப்பாடல். புறநானூறு-122 பாடியவர்-கபிலர் பாடப்பட்டவர்- மலையமான் திருமுடிக்காரி கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் றுப்பா கியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை நினதென விலைநீ பெருமிதத் தையே. பொருள்- திருமுடிக்காரியின் நாடு கடலாலும், பகைவராலும் அழிக்க இயலாதது எனினும் வேள்வித்தீ வளர்க்கும் குற்றமற்ற அந்தணர்க்குத் தரப்பட்டதாகும். தம்முடன் இணைய வேண்டுமென்று மூவேந்தரும் தரும் செல்வங்களோ தம் ஈகைக் குணத்தால் இரவலர்க்குத் தரப்பட்டதாகும். இதைத்தவிர காரிக்கு செல்வம், சொத்து உண்...

சங்கத்தமிழில் உலகத் தோற்றம்-19

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-19 உலகின் தோற்றமும் ஒடுக்கமும் பற்றிய விஞ்ஞானப் பார்வை மெய்ஞ்ஞானத்தின் வடிவில். Bigbang theory illustrated in Tamil sangam literature- paripadal பாடல்:- தீசெங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசில்ஆ யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம் ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு  கேழாய் மருப்பின் உழுதோய் எனவும் மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் எனுவும் ஞாலத்து உரையுந் தேவரும் வானத்து நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர் பாடும் வகையே எம்பாடல் தாமப் பாடுவார் பாடும் வகை! பரிபாடல் 25-30. பொருள்:- இந்த அண்டமானது அழியும் #ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கும் பெருநெருப்பாக இருப்பவனே, திருமாலே, ஆயிரம் கதிருடைய சூரியனும் நீயே, உயிர்களுக்கு விதியாக இருப்பவனே!  இவ்வுழிக்கால்ததில் பூமியைப் பன்றி (வராஹ அவதாரம் ) உருவெடுத்து வெள்ளத்திலிருந்து மீட்டவனே!! பெருமழையால் ஆழி சூழ்ந்த உலகை அன்னப்பறவையின் உருவெடுத்து சிறகால் காத்தவனே! நின்னை அனைத்து தேவாதி தேவர்களும் தொழுது வணங்குகின்றனர்.அடியனும் உன்னை அவ்...

விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா?

Image
விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா? இல்லை.... பௌதத்திலும், சமணத்திலும் அவருக்கு உயரிய இடம் உள்ளது. கணேஷ சஹஸ்ரநாமமத்தில் புத்தா என்பதே விநாயகரின் பெயராக வருகிறது. ஸ்வேதாம்பர ஜைனர்கள் கடவுளர்களுக்கே கடவுளாக விநாயகரைப் போற்றுகின்றனர். ரோமானிய கடவுளான ஜானஸ் (இருமுகம் உடையவர்) நமது விநாயகரின் ஒரு வடிவமான 'த்விமுக விநாயகரோடு' நெருங்கிய தொடர்பு உள்ளது. இலங்கை, பாகிஸ்தான், சீனா, திபெத், மங்கோலியா, பர்மா, கம்போடியா, ஜாவா, சுமத்ரா, வியட்னாம் ஆகிய நாடுகளில் விநாயகர் இன்று வரை வணங்கப்படுகிறார். ஜப்பானில் 'காங்கிடென்' என்ற பெயரில் போற்றப்படுகிறார். இந்தோனேசியாவில் ரூபாய் நோட்டிலும், பல்கலைக்கழக முத்திரையில் அருளுகிறார். அகண்ட பாரத தேசத்தின் அடையாளமாக, பெரிதும் போற்றப்படும் தெய்வமாக நமது பிள்ளையார் விளங்குகிறார். . விநாயகர் தடைகளை நீக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். பாரத தேசம் மட்டுமின்றி அகண்ட பாரதத்திலும் தன் ஆதிக்கம் செலுத்துகிறார். இதோ தாய்லாந்து நாட்டில் உள்ள பிரமாண்டமான கணபதி சிலை. இந்தோனேசியாவின் பாலித் தீவில் இன்றளவும் இந்துதர்மமே பின...

எந்நாட்டவர்க்கும் இறைவன் எம் முருகன்!!!

Image
முருகப் பெருமான் தமிழருக்கு மட்டும் கடவுள் அல்ல...இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர் வணங்கப்படுகிறார்!  வங்காள முருகன்  உதாரணமாக வங்காளத்தில் துர்கா பூஜையின் போது முருகனை வணங்குவர்! அங்கு கார்த்திகேயன் என்ற பெயர் அவருக்கு! முருகன் கிரேக்க, ரோமானியர்க்கும் தலைவனா? சங்க இலக்கியங்கள் முருகனை வெற்றியின் தெய்வமாகக் காட்டுகின்றன. சம்ஸ்கிருத இலக்கியங்களும் முருகனை அசுரர்களை வெல்ல வந்தவன் என்றும், தேவர்களின் சேனாதிபதி என்றும் குறிப்பிடுகின்றன. முருகன் போர்த்தெய்வமாக காட்டப்படுகிறார், தீயிலிருந்து தோன்றியராகவும், ஜோதிடத்தில் செவ்வாயின் அதிபதியாகவும் காட்டப்படுகிறார். செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி, மேஷம் என்பத ு ஆடாகும், சில ஆலயங்களில் முருகனுக்கு ஆடு வாகனம் காட்டப்படுகிறது. முருகன் இந்துமதத்தின் ப்ரதான தெய்வமான சிவனது மகன். அவரது நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வந்த சிவந்த மேனியன் என்கின்றன புராணங்கள். அதேபோல் கிரேக்க தெய்வம் ஏரிஸ் (ஆங்கிலத்தில் மேஷ ராசியை ஏரிஸ் என்பர்) ஜீயுஸ் எனும் தலைமைக்கடவுளின் மகன். (ஜீயுஸ் என்பது ஜூபிடர்- வியாழனைக் குறிக்கும். நமத...

சங்கத்தமிழில் அணுக் கொள்கையும் ஆன்மிகமும் - 18

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-18 அணுக்கொள்கையை வகுத்தவன் தமிழனே!!! இதோ ஆதாரம். திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார் அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும் வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே? (பரிபாடல்-55). பொருள்- திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ (திருமால்) உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர். தெளிவுறை: இறைவன் என்பவன் அனைவருக்கும் முதலானவன், பொதுவானவன். அவன் தன்னைச் சரணடைந்தோரைக் காப்பான். அதாவது தீய குணமுள்ள அரக்கர்களைப் போன்ற மனிதராயினும் தம் தவறுணர்ந்து இறைவனிடம் சரணடைந்தால், அவன் தீயோரையும் நல்லோராக்கிக் காப்பான் என்ற சனாதனதர்மக் கருத்தை இப்பாடல் நிறுவுகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில...