Posts

Showing posts from 2018

திருக்குறளில் திருமகள்

Image
திருக்குறளில் அதிகமான முறை குறிப்படப்படும் தெய்வம் மஹாலக்ஷ்மி தாயாரே ஆவார்! குறள் 617: மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். விளக்கம் ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே தாமரையினாள் (திருமகள்) வாழ்கின்றாள்! குறள் 179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. விளக்கம் அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்! குறள் 920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. விளக்கம் இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்! அதாவது தீய வழியில் செல்வோருக்குத் தாயார் அருள் கிட்டாது! குறள் 167: அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் கா ட்டி விடும். விளக்கம் பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள். வைதீக வள்ளுவர்  

ஐம்படைத்தாலி

Image
காக்கும் இயல்வினனான கண்ணபிரானின் படைக்கருவிகளான சுதர்ஸனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு,  கொமோதிகி என்னும் கதை, நாந்தகம் என்னும் வாள், சார்ங்கம் என்னும் வில் ஆகிய ஐந்தினையும் பஞ்சாயுதங்கள் என்பர். எதிரிகளை அழித்த இப்படைகலண்கள் சிறுகுழந்தைகளை துஷ்ட சக்திகளிடத்திருந்து காக்கும் என்பது நம்பிக்கை. இவற்றை பொன்னால் ஒரு பதக்கம் போல் செய்து குழந்தைகளின் பதின்ம வயது வரை கழுத்தில் அணிவிப்பது பண்டைய தமிழர் மரபு. "தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு அயினியும் இன்று அயின்றனன்" -புறம் "முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகுவென் பால்" -அகம் "செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப" -மணிமேகலை "எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழு இல் கொடையான் வயிச்சிரவணன் தொழுது உவனாய் நின்றான் தாலேலோ                  தூமணி வண்ணனே தாலேலோ" -பெரியாழ்வார் திருமொழி "மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும

வைதீக வள்ளுவர்

Image
வைதீக வள்ளுவர் திருக்குறளின் பெருமையை விவரிக்க வந்த நூல் திருவள்ளுவ மாலை ஆகும்! இதில் பாரதம் பாடிய பெருந்தேவனார், பரணர்,நல்கூர்வேள்வியார், பொன்முடியார், கபிலர் உள்ளிட்ட புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்துள்ளனர்! இறையனார் சிவபெருமானும் , ஸரஸ்வதி தேவியும் வாழ்த்துவதாக அமைந்துள்ளது! வள்ளுவம் வைதீக நூல் என்பதற்கு இதுவே போதுமான் சாட்சியாக உள்ளது! புலவர்களது பாடல்கள் கருத்து வடிவில்... 🙏 திருமால் சிறிய வாமனராகத் தோன்றி த்ரிவிக்ரமனாக வளர்ந்து தம் இரண்டு அடிகளால் உலகளந்தார் அதேபோல் வள்ளுவர் தம் இரண்டடி குறட்பாக்களால் உலகளந்தார்! 🙏 திருமாலின் புத்ரனும் வேதங்களைக் கொண்டு படைப்பவனுமான ப்ரம்மதேவரே திருவள்ளுவராகத் தோன்றி திருக்குறள் அருளினார்! 🙏 திருமகளது சிறப்பு திருமாலை அடைவது போல் வெண்பாக்களின் சிறப்பு திருக்குறளாகும்! திருக்குறளைக் கற்காதவரிடத்தே திருமகள் விரும்பி அருள் செய்யமாட்டாள்! 🙏 ஏழுகாளைகளை அடக்கி ந ப்பின்னை  பிராட்டியை மணந்த கண்ணன் வடமதுராவுக்கு அச்சாவது போல் தென்மதுரைக்கு வள்ளுவர் அச்சாவார்! அதாவது கண்ணன் கீதையின் சாரத்தை வள்ளுவர் பாடினார் என்று மறைமுக

பெருந்தமிழன் நல்லேன் பெரிது

Image
பெருந்தமிழன்_நல்லேன்_பெரிது ! யார் உண்மையான தமிழர்? யார் பேசுவது உண்மையான  தமிழ்தேசியம் ? யாருடையது தமிழர் சமயம்? பாரத தேசத்தையும், சநாதநதர்மத்தையும் எதிர்க்கும் 'திடீர் தமிழ்தேசியர்' இந்த ஈராயிரம் வருட  தமிழ்தேசியர்களின்  கேள்விக்குப் பதில் தருவீரா? முந்து நூல்  தொல்காப்பியம்  காட்டும் முதல் தெய்வத்தை பெயர் திரிக்காது மாயோன், மாயவன், மாலவன் என்றே பழமை மாறாது பாசுரம் பாடிப் பரவுவோர் யார்? சங்கத் தமிழர் தம் பெருந்தெய்வம்  மாலவனை  பைந்தமிழால் பாடுவதால் 'என்னினும் பெருந்தமிழன் உளரோ' என்று கேட்கும்  பூதத்தாழ்வார்  வழி நிற்போர் யார்? வள்ளுவத்தை  உலகப்பொதுமறை  என்று கூறும் முன்பே பாண்டிய நாட்டுப் பைந்தமிழ்ப் பெண் ஆண்டாள் நாச்சியார் படித்த பாமாலை அறியாதாரை 'வையம் சுமப்பது வம்பு' என்றே பாடி தெய்வத் தமிழ்நூல்  திருப்பாவையை  உலகப் பொதுமறையாகக் கண்டவர் யார்?  தெலுங்கு மன்னரான  கிருஷ்ணதேவராயரையும்  தமிழ்ப் பெண் ஆண்டாள் மீது பக்தி கொண்டு ' ஆமுக்தமால்யதா ' என்று சரிதத்தை தெலுங்கில் எழுத வைத்துத் தமிழ் பெண்மைக்குப் பெருமை சேர்த்தார் யார்? ஆந்திர

சங்கத்தமிழ்_காட்டும்_கிருஷ்ணபக்தி - 53

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 53  "காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா" என்று காணும் இடமெல்லாம் கண்ணனைக் கண்டு பாடினான் பாரதி! இம்மரபு தமிழருக்கு எப்போது தோன்றியது? பக்தி இயக்க காலத்திலா? பக்தி இயக்க காலத்தில் இது வளர்ந்தது உண்மை, ஆனால் இதன் மூலம் தமிழின் மிகப் பழைய சங்க இலக்கியங்களில் தான் உள்ளது! அகநானூறு 175 வது பாடல்! 'நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், திருவில்...' அதாவது சூர்ய கதிர்களைப் போன்ற ஒளிமிக்க சக்கரம் (நேமி) உடையவன் திருமால், பகைவர்கள் போர் சிந்தனையையே துறக்கும் அளவிற்கு அச்சம் அடையச் செய்யும் வலிமை மிக்க அவனது மார்பினில் உள்ள மாலையைப் போன்று கார்காலத்தில் தோன்றிய வானவில்லின் நிறம் இருந்ததாம்! வானவில் தோன்றும் இயற்கைக் காட்சியைக் கூட தாம் வணங்கும் இறைவனான திருமாலோடு இணைத்துப் பார்த்த சங்கத்தமிழரது பக்தியை என்னவென்பது?!

சங்கத்தமிழ்_காட்டும்_ஆலய வழிபாடு- 52

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 52 சங்க இலக்கியங்களில் உள்ள சில பாடல்களை மட்டும் படித்துவிட்டுச் சங்கத்தமிழர் நடுகல் வழிபாடு மட்டுமே செய்தனர்! வைதீக மதத்தைப் பின்பற்றவில்லை என்று பலர் பேசத்துவங்கிவிட்டனர்! அதற்குப் பதிலடி சங்க இலக்கியத்திலேயே உண்டு! பெரும்பாணாற்றுப்படை எனும் நூலை உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் தொண்டைமான் இளந்திரையன் மீது பாடியுள்ளார்! இதில் அம்மன்னனைத் திருமால் வழிவந்தவன் என்று காட்டுகிறார்! அவன் ஆண்ட காஞ்சி மாநகரே திருமால் நாபியிலிருந்து தோன்றிய தாமரையின் வடிவம் என்கிறார்! அதே போல திருவெஃகா எனும் திவ்யதேசத்தின் பெருமையைப் பாடுகிறார்! 'நீடு குலைக் காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்' (அடி.371-373) அதாவது காந்தள் மலர் நிறைந்த மலைச்சாரலிலே பெரிய ஆண்யானைப் படுத்திருப்பதைப் போல் திருவெஃகா நகரின் மையத்தில் கோவில் கொண்ட திருமால் ஆயிரம் தலைவிரித்த பாம்பணைமீது பள்ளி கொண்டுள்ளாராம்! அந்நகர மக்கள் திருமாலை பக்திப் பரவசத்தோடு வணங்கிவருவராம்! அங்கு நீயும் சென்று உன் யாழை மீட்டி திருமால் மீது பக்திப் பாடல்கள் பாடி வணங்கிவா என்று

சங்கத்தமிழில் திருமகள் - 51

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் தமிழ் மரபில் திருமகளுக்குச் சிறப்பான இடம் உண்டு! ஸம்ஸ்க்ருதத்தில் 'ஸ்ரீ' என்பது லக்ஷ்மியைக் குறிப்பது போலவே தமிழில் 'திரு' என்பது நீங்காத செல்வம் உடையவளான திருமகளையே குறிக்கும்! தமிழரது பல்வேறு ஊர்ப்பெயர்கள் 'திரு' என்றே தொடங்கும்! இது ஒன்றே திருமகளுக்குத் தமிழர் தந்த பெருமதிப்பிற்கான சான்றுதானே?! சங்க நூல்கள் மஹாலக்ஷ்மியைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றன! திருமாலை வர்ணிக்கும் பல்வேறு இடங்களில் அவன் வல மார்பினில் வடிவாய் விளங்கும் திருமகளை சேர்த்தே போற்றுகின்றனர் சங்கத்தமிழ்ப் புலவர்கள்! அதற்கான உதாரணம் கீழே! வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல - முல்லைப்பாட்டு (2,3) வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்து - பதிற்றுப்பத்து- 31 இருகிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் - பெரும்பாணாற்றுப்படை - 28 திருவின் கணவ! பெரு விறல் மள்ள! - பரிபாடல் 90 சிறந்த கணவன் மனைவிக்கான உதாரணமாக பழந்தமிழர் கொண்டது திருமாலையும் திருமகளையும் தான் போலும்... அதனால் இலக்கியத்திலும் கூட திருமகளை பெரும்பாலும் 

தமிழ் இலக்கியங்களில் ராமபிரான்

Image
தமிழ் இலக்கியங்களில் ராமபிரான் தொல்காப்பியம் காட்டும் முதல் தெய்வம்  மாயோனாகிய திருமாலே ஆவார். மாயோன் மேய காடுறை உலகமும்  சேயோன் மேய மைவரை உலகமும்  வேந்தன் மேய தீம்புனல் உலகமும்  வருணன் மேய பெருமணல் உலகமும்  முல்லை  குறிஞ்சி மருதம் நெய்தலெனச்  சொல்லிய முறையான் சொல்லவும்  படுமே   -  தொல்காப்பியம் பொருள்.அகத் 5 தமிழரின் முதல் தெய்வமான மாயோனின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளைக் காண்போம். அகநானூறு நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த சங்கப்புலவர்  அதற்கு தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த இராமாயணத்தில் இருந்து ஒரு காட்சியை உவமிக்கிறார் . வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே  (அகநானூறு 70: 13-17). அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு

தெய்வீகப் பாண்டியர்கள்

Image
தெய்வீகப் பாண்டியர்கள் #மாயோன் வழிவந்த சந்திர குலத்தவர்கள் பாண்டியர்கள் "இரண்டாம் ராஜசிம்மன் பாண்டியன்(கிபி741) சின்னமானூர் கல்வெட்டு" கல்வெட்டு விவரம்: " திருவொடு தெள்ளமிர்தத்தோடு; செங்கதிரொளி கௌஸ்து பத்தொடும்  அருவிமதக் களிற்றொடு தோன்றி;அரன்அவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்திங்கள் முதலாக வெளிப்பட்டது; நாற்றிசையோர் புகழ் நீரது; பாரத்துவாஜிகளால் நேரே ஸ்துதிக்கப்பட்டது;;விரவலர்க்கரியது;மீனத்துவ சாசனத்து ;பெருவளர் சீர்  "அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது"; ஊழியூழிதோரும்  உள்ள நின்ற. ஒருவனை உடையது வாழிய பாண்டியர்" பொருள்:  திருவாகிய லக்ஷ்மியோடும், அமிர்தத்தோடும், செம்மையான கதிரவனைப் போன்ற ஒளி உடைய கௌஸ்துப மணியோடும், மதக் களிறாகிய ஐராவதத்தோடும், சிவபெருமானால் அணியப்படும் சந்திரன் தோன்றினான்..  அந்தச் சந்திரனிலிருந்து தோன்றியதும், நான்கு திசையும் புகழ் உடையதும், வெல்வதற்கரியதும், மீன் கொடியை உடையதும், அகஸ்திய முனிவரைத் தன் ராஜகுருவாக, ப்ரோகிதராகக் கொண்டதுமான சிறப்பை உடையதுமான பாண்டியர் குலம் வாழ்கவே! விளக்கம் -  விஷ்ண

மாயோன்

Image
மாயோன் -1 Who is Mayon? Tamil god mayon மாயோன் என்பவர் யார்? மாயோன் முல்லை நிலத் திணை தெய்வம், மக்களைக் காக்கும் திருமாலாகிய பெருந்தெய்வம். தமிழரது முதல் தெய்வம். தமிழர் தெய்வம் மாயோன். மாயோன் என்பவர் தொல்காப்பியத்தில் முல்லை நிலத்தின் திணை தெய்வமாகக் குறிப்பிடப்படுகிறார். தமிழரின் முதல் தெய்வம் மாயோனே! தொல்காப்பியம் மாயோன் மேய காடு உறை உலகமும் சேயோன் மேய மை வரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும்        படுமே தொல்காப்பியம் பொருள்.அகத் 5/1 பொருள் - மாயோன் காடுறை உலகமான முல்லை  நிலத் தெய்வம் , குறிஞ்சிக்கு சேயோனாகிய முருகன் தெய்வமாவார், மருத நிலத் தெய்வம் வேந்தன் அதாவது தேவர்களுக்கெல்லாம் வேந்தனான இந்திரன். நெய்தல் நில தெய்வம் வருணன் ஆவார். இவர்களே தமிழரது திணை தெய்வம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே தமிழரின் முதல் தெய்வம் மாயோனே! அதே தொல்காப்பியத்தில் மற்றொரு முறை மாயோன் குறிப்பிடப்படுகிறார். மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ் பூவை நிலையும் தெல்