Posts

Showing posts from April, 2017

சங்கத்தமிழ்_காட்டும்_வேதநெறி -31

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-31 வேதங்கள் பல்வேறு தெய்வங்களைப் போற்றினாலும், அத்தெய்வங்கள் அனைவரும் ஒன்றே, ஒரே தெய்வீக அம்சத்தின் பல்லவேறு வெளிப்பாடுகள் என்ற கொள்கையை மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றன. நம் சங்கத்தமிழ் புலவர்கள் இதை கொள்கையை இவ்வாறு பாடியுள்ளனர். பரிபாடல் - திருமால்வாழ்த்து பாடல்- 3 வரிகள் 1- 10 தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், திதியின் சிறாரும், விதியின் மக்களும் மாசில் எண்முரும், பதினொரு கபிலரும் தாமா இருவரும், தருமனும் மடங்கலும், மூவேள் உலகமும்,உலகினில் மன்பதும், மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தோம் மாயா வாய்மொழி உரைதர வலந்து! பொருள்- நீர், தீ உள்ளிட்ட பஞ்ச பூதங்களும், சூரிய, சந்திரனாகிய இரு சுடர்களும், அறம்-பொருள்-இன்பமும், ஐந்து கோள்களும்- செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களும், திதி, அதிதியின் புத்திரர்களான தேவர்களும், அசுரர்களும், குற்றமற்ற அஷ்ட வசுக்களும், பதினொரு ருத்திரர்களும், இரு அஷ்வினி குமாரர்களும், தர்மதேவன் ஒருவனும், மூன்று ஏழான இருபத்தொரு லோகங்களும், இவ்வுலகில் வாழும் அனைத்து உயி

முதலாம் ஆர்யபடர்

Image
முதலாம் ஆர்யபடர் உலக அறிவுத் துறையின் வளர்ச்சிக்கு பாரதப் பல்கலைக்கழகங்களே அடித்தளமிட்டன. இந்திய அறிவியல் அறிஞர்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் ஆர்யபடரே. முதலாம் ஆர்யபடர்-( காலம்- கி.பி 476- 550).மிகச் சிறந்த வானியல் மற்றும் கணிதவியலாளர். இவர் பிறப்பிடம் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன... எனினும் திருவாஞ்சிகுளம் (இன்றைய கேரளத்தில் உள்ளது) ஊரைச் சேர்ந்த தமிழரென்றும் கூறுவர். இவரே பூஜ்யத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு வழிகாட்டியவர். இவர் நாளந்தா பல்கலைக்கழகத்திற்குத் தலைமை தாங்கினார். பீகாரில் தரேகனா என்னும் இடத்திலுள்ள சூரியனார் கோவிலில் கோளரங்கத்தை (planetarium) நிறுவினார். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கணித முறைகளான arithmetic ,algebra, plane trigonometry, spherical trigonometry, continued fractions, quadratic equations ,table of signs ஆகியவற்றுக்கு அடித்தளமிட்டவர் இவரே. பூமி தன்னைத் தானே சுற்றும் உண்மையையும், கிரகணம் ஏற்படும் காரணத்தையும் விஞ்ஞானப் பூர்வமாக கூறியவர்.    தொழில்நுட்பங்கள் வளராக் காலங்களிலேயே ஒரு நாள் என்பது 23- மணி நேரம், 56-நிமிடம்,4.1 -நொ

பக்திமணக்கும்_தமிழ்மண்-2

Image
பக்திமணக்கும்_தமிழ்மண்-2 500 வருடம்  இளையவர்  அண்ணன்? ஆண்டாளுக்கு அண்ணன் ராமானுஜர் எப்படி? ஆண்டாளின் 'வாழித் திருநாமப்பாட்டு', 'பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' என்கிறது. அதாவது ராமானுஜருக்கு ஆண்டாள் தங்கையாம்!!! இதில் அதிசயம் என்னவென்றால் ஆண்டாள் வாழ்ந்தது 7ம் நூற்றாண்டு, ராமானுஜரது காலமோ 12ம் நூற்றாண்டு. ஆக, ராமானுஜர் ஆண்டாளை விட 500 வருடம் இளையவர்!! பின் எப்படி அண்ணன் ஆனார்? பார்ப்போம். ஒருமுறை ஆண்டாள் அழகர்கோவில் திருமாலுக்கு 'நூறுதடா வெண்ணெய்யும், நூறு தடா அக்காரவடிசிலும்' தருவதாக நேர்த்திக்கடன் செய்திருந்தாள், ஆண்டாள் நாராயணனோடு இணைந்துவிட்டாள், அதற்குப் பிறகு அந்த நேர்த்திக்கடனை யாரும் செலுத்தவில்லையாம். 500 வருடங்கள் கழித்து வந்த ராமானுஜர் இதை நினைவில் கொண்டு திருமாலிஞ்சோலை அழகனுக்கு ஆண்டாளின் சார்பாக நேர்த்திக் கடனைச் செய்தார். பின்னர் ராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றபோது அவரை எதிர்கொண்டு ஆண்டாளே 'அண்ணனே_வருக' என வரவேற்றார்.இதனால் ராமானுஜருக்கு 'கோயில் அண்ணர்' என்ற மரபும் வந்தது. தந்தையில்லா இடத்தில

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image
மேஷ ராசியில் சூர்யபகவான் உச்சம் பெறுகின்ற மாதம் (மேஷ ஸங்கராந்தி) சித்திரையே அதனால் தமிழர்களுக்கு சித்திரை முதல்நாளே புத்தாண்டு. சோழர்கள் ஆட்சி செய்த அகண்ட பாரத தேசத்தின் பல பகுதிகளில் சித்திரை தான் புத்தாண்டு. வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் புத்தாண்டை பார்ப்போம். கேரளாவில் விஷூ (vishu) வட பாரதத்தில், சீக்கியர்களுக்கு வைஷாகி (vaishaki) ஒரிசாவில் விஷ்வ ஸங்கராந்தி (vishwa sankaranthi) வங்காளத்திலும், வங்கதேசத்திலும் பொஹேளா பொய்ஷாக் (pohela boishakh) அசாமில் ரங்காலி பிஹு (rongali bihu) நேபாளத்தில் பிக்ரம் ஸம்வத் (bikram sanwat) இலங்கையில் அலூத் அவ்ருத்து (aluth avuruthu) பர்மாவில் திங்க்யான் (thingyan) லாவோஸ் நாட்டில் சோங்கான், பி மாய் லாவோ (songkan/ pi mai lao) கம்போடியாவில் சோள் சிநாம் த்மேய் (chol chnam thmey) தாய்லாந்தில் ஸங்க்ரான் (songkran) இதில் குறிப்பிடத்தக்கது யாதெனின் இவை அனைத்தும் அகண்ட பாரத தேசத்தின் பகுதிகளே!! மேலும் சங்கராந்தி என்பதே பலவாறாக திரிந்துள்ளதை இங்கு காணலாம். அனைவருக்கும் அகண்ட பாரத தேசத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சங்கத்தமிழில் ஸ்வர்க நரகம் -30

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-30 சங்கக்காலத்திலிருந்தே தமிழர்களிடம் சுவர்க்கம், நரகம் பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன என்பதற்கு இப்பாடலே சாட்சி. புறநானூறு-195 கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்; பொருள்: சான்றோரைப் பார்த்துப் புலவர் கூறுகிறார், ' முதுமையை எட்டிவிட்ட நீங்கள் நல்வினை செய்யுங்கள், மரணத்தருவாயில் உங்கள் உயிரைப் பறிக்க கொடுமையான ஆயுதங்களை உடைய எமன் வருவான் அப்போது வருந்தி என்ன பயன்? இப்போதே நல்வினைகளை ஆற்றுங்கள், அல்லது தீவினை செய்வதையாவது நிறுத்துங்கள் என்கிறார். நாம் அறிந்து கொள்வது: இந்து புராணங்களின் படி யமன் அஷ்டதிக் பாலர்களில் ஒருவன், மரணத்தின் அதிபதி. தீயவர்களின் உயிரைப் பறிக்க வருபவன் ஆவான். இந்த நம்பிக்கை சங்ககால்தது தமிழனிடத்தே இருந்தது, ஆகவே தீய செய்கைகள் செய்யக் கூடாது என்ற உயர்ந்த சனாதனதர்மக் கருத்துக்களைப் பின்பற்றினான். புராணங்கள் அனைத்தும் ஆரியப் புரட்டு என புறந்தள்ளுவோர்க்கு சங்கத்தமிழர் எமனை நம்பிய செய்தி அதிர்ச்சியைத் தரும் என

சங்கத்தமிழ்_காட்டும்_கர்மவினை -29

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-29 சனாதனதர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று கர்மவினைக் கோட்பாடு ஆகும். ஒரு மனிதன் இப்பிறவியில் செய்த நன்மையும், தீமையும் அவனைத் தொடர்ந்து வரும், மறுபிறவியிலும் அதற்கேற்ற பலன்கள் வந்தடையும் என்பதே அக்கொள்கை ஆகும்.  அதனால் தான் பாவம் சேர்க்காமல், புண்ணியம் சேர்க்க வேண்டும் என நம் முன்னோர் வலியுறுத்தினர். இக்கருத்து சங்கக்காலம் முதலே தமிழகத்தில் இருந்து வந்தது என்பதை இப்பாடல் மூலம் அறியலாம். புறநானூறு- 134 இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அலன்; பிறகும் சான்றோர் சென்ற நெறியென ஆங்கும் பட்டன்று அவன் கைவண்மையே. இப்பாடலில் புலவர் ஆய் அண்டிரனை இவ்வாறு புகழ்கிறார்... இந்த பிறவியில் செய்த புண்ணியம், மறு பிறவியல் உதவும், என்றாலும் நீ அதற்கு ஆசைப்பட்டு ந்னமைகள் செய்பவனல்ல மாறாக சான்றோர்கள் செல்லுகின்ற வழியை அப்படியே பின்பற்ற நடப்பவன் என்பதாலேயே நல்வினைகளைச் செய்கிறாய். நாம் அறிந்து கொள்வது: தமிழர் பழங்காலத்திலிருந்தே இம்மை, மறுமை எனும் பல பிறவிக் கொள்கையை உடையவர்கள், ஆகவே தமிழர் சமயம் சனாதனதர்மமே! ஆக, சனாதனதர்ம வழியில்

சங்கத்தமிழ் பரசுராம அவதாரம்- 28

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 28 சனாதனதர்மத்தின் படி எம்பெருமான் ஒன்பது அவதாரங்கள் எடுத்து அதர்மத்தை அழித்தார் என்பது உண்மையாகும். இதில் பசுரராம அவதாரம் பற்றிய செய்தி அகநானூற்றில் உள்ளது. அகநானூறு பாடல்-220 (வரி 5-9) மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின் அருங் கடி நெடுந்தூண் போல. பொருள்: மன்னர் பரம்பரைகளை அழித்து ஒழித்த மழுவினை உடைய பரசுராமர், முற்காலத்தில் இங்கே (செல்லூர் எனும் ஊரில்) பெருமுயற்சி செய்து வேள்வி செய்தார். அப்போது மிக உயர்ந்ததும், கயிற்றால் கட்டப்பட்டதுமான அழகிய யாகத்தூணை நிலைநிறுத்தினார், காவல் காக்கப்பட்ட அத்தூணை காண்பதே அரிது, அது போன்றது தலைவியின் அழகு என்று பாடல் கூறுகிறது. நாம் அறிந்துகொள்வது: நெடியோன் என்பது திருமாலைக் குறிக்கும், அதிலும் அதர்மம் செய்த க்ஷத்ரிய மன்னர் குலத்தை வேரோடு சாய்த்த மழு எனும் கோடரியை ஆயுதமாக உடையவர் பரசுராமரே, தமிழ்நாட்டில் செல்லூர் எனும் ஊரில் அவர் வந்து யாகம் செய்தார் என்று கூறுவதன் மூலம் பசுரராம அவதாரம் உண்மை என்று சங்கப்புலவர் ஏற்கின்றனர்

சங்கத்தமிழில் ராமாவதாரம்-27

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-27 சனாதனதர்மத்தின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க இதிஹாசங்கள் உதவின. இறைவனே மனிதனாக அவதரித்து மாந்தர் வாழ்வதற்கான நெறியைக் காட்டினார். அதுவே இராமாயணம் ஆகும். கம்பருக்கு முன்பே ராமகாதை தமிழகத்தில் ப்ரபலமாக இருந்திருக்கின்றது. மேலும் இராமகாதை உண்மையான வரலாறே என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த சங்கப்புலவன் இவ்வாறு பாடுகிறான். வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே  (அகநானூறு 70: 13-17). அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒலி செய்து தொந்திரவு செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற அமைதியை நகரம் அடைந்தது. இதன்மூலம் ஸ்ரீராமன் வாழந்ததும், வானர சேனையோடு தனுஷ்கோடி வந்ததையும்,

சங்கத்தமிழில் மஹாபாரதம்-26

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-26 மஹாபாரதம் சனாதனதர்மத்தின் மிக முக்கிய இதிகாசமாகும், உலகின் மிகப் பெரிய காவியமும் ஆகும். அது நடந்தது உண்மையா? ஆம், ஆதாரம் புறநானூற்றில் உள்ளது. புறநானூறு-2 (13-16). அலங்குளை புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம்பதின்மரும் பொருது, களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய். என்று இப்பாடல் உதியன்சேரலாதனின் ஈகைக் குணத்தைக் கூறுகிறது. அதாவது ஐவராகிய பாண்டவரும், ஈரைம்பது- நூறு கௌரவரும் போர் செய்த பாரதப் போரில், அப்பெரும் படைக்கு உணவைச் சேரலாதன் தந்துள்ளான். அது பற்றியே அவனுக்குச் 'சேரமான் பெருஞ்சோற்று உதியன்சேரலதன்' எனும் பெயரும் கிடைத்துள்ளது. மேலும் புறநானூற்றின் கடவுள் வாழ்ததுப் பாடியவர் பெருந்தேவனார் ஆவார். தமிழில் முதன்முதலில் மஹாபாரதத்தை இயற்றியதால் இவரை 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்று அழைப்பர். இவற்றின் மூலம் மஹாபாரதம் நடந்தது உண்மையே என்பதும், அதில் தமிழ் மன்னர்களது பங்கும் இருந்தது என்பதும் உணரப்படுகிறது.

பக்திமணக்கும்_தமிழ்மண்-1

Image
கண்ணனுக்கே கண்திருஷ்டி கழித்த மதுரைக்காரர் ஆறாம் நூற்றாண்டில் கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர் 'பெரியாழ்வார்' எனும் 'விஷ்ணு சித்தர்' ஆவார். ஒருமுறை வல்லபதேவ பாண்டியன் எது சிறந்த சமயம் என்ற வாதத்தை வைக்கவே, பெரியாழ்வார் வாதத்தில் வென்று வைஷ்ணவத்தின் சிறப்பை மதுரை மண்ணில் நிலைநாட்டினார். அரசர் அவரை கௌரவிக்க பட்டத்து யானைமீது ஏற்றி பவனி வரச்செய்ய அப்போது நாராயணன் கருடவாகனத்தில் பெரியாழ்வாருக்குக் காட்சி தரவே, எம்பெருமானின் அழகில் மயங்கி , அவனுக்குக் கண் திருஷ்டி பட்டுவிடக் கூடாதென கண்ணேறு கழித்தார். அதுவே திருப்பல்லாண்டு பாடல்.  " பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு    பலகோடி நூறாயிரம்    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்    சேவடி செவ்வித்திருக்காப்பு. இறைவனுக்கே கண்திருஷ்டி கழித்த மதுரைப் பாண்டிய மண்ணின் மாண்பை என்னவென்பேன். மதுரைக்காரன் என்பதில் பெருமை.

சங்கத்தமிழ்_காட்டும்_வர்ணாஸ்ரமம்-25

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-25 சனாதனதர்மம் காத்து நின்ற தமிழ் வேந்தர்கள். புறநானூறு பாடல் 6 (16-20) பணியியர் அத்தை நின் குடையே; முனிவர் முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே! இறைஞ்சுக, பெரும நின்சென்னி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! பொருள்- எதிரிகளுக்கு முன் உனது வெண்கொற்றக் குடை பணியாது, ஆனால் முக்கண்ணனாகிய சிவபிரானது கோவிலை வலம்வரும்போது மட்டும் நின் குடை பணியும், யார் முன்னும் வணங்கா நின் தலையானது மறை ஓதும் அந்தணர் முன்னர் மட்டும் வணங்கும் என்று காரிகிழார் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றுகிறார். நாம் அறிந்துகொள்வது. சனாதனதர்மத்தில் மன்னனுக்கு உயரிய இடமுண்டு என்றாலும், அவன் தெய்வ நம்பிக்கை கொண்டவனாகவும், தெய்வத்தை மதிப்பவனாகவும், நான்கு மறைகளான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் கற்ற முனிவரையும் , அந்தணரையும் வணங்கி, அவர் சொற்படி நடக்க வேண்டும். இதை முதுகுடுமிப் பெருவழுதி செவ்வனே செய்து போற்றத்தக்கவன் ஆனான். இதன்மூலம் தமிழர்கள் தம் கடவுளுக்கும், நான்கு மறைகளுக்கும் தந்த உயரிய இடம் புலனாகிறது.

சங்கத்தமிழ்_காட்டும்_பாரதவர்ஷம்-24

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-24 பாரதம் ஆண்ட பாண்டிய மன்னன். புறநானூறு-6 பாடல் (1-7) வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரையொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது ஆனிலை உலகத் தானும் ஆனாது. என்று காரிகிழார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழ்கிறார். அதாவது பனிபடர்ந்த இமயத்தை வடக்கேயும், தெற்கே குமரியையும், கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையுமே எல்லையாக்க கொண்ட இப்பெருநிலத்தை (பாரத தேசத்தை) ஆள்கின்ற மன்னவா நின் புகழ் நீர் சூழ் இவ்வுலகிலும், ஆனிலை உலகமாகிய மேலுலகிலும் பரவியுள்ளது. நாம் அறிந்துகொள்வது. பாண்டிய மன்னன் பழங்காலத்தில் பாரத தேசத்தையே ஒரு குடையின் கீழ் ஆண்டுள்ளான். இது ஆராயத்தக்க கருத்தாகும். அவ்வாறு புறநானூற்றுப் புலவன் கூறவது உண்மையாயின் புறநானூற்றின் காலம் மிகப்பழையதாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட பாரத தேசம் என்பது தமிழரால் மிகப்பழங்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பாரததேச்ததை ஆண்ட பாண

சங்கத்தமிழ்_காட்டும்_யுத்த தர்மம்-23

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-23 புறநானூறு பாடல் -9 (1-5) ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என போர் செய்வதற்கு முன்னர் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பசுக்களையும், பார்ப்பனர்களையும், பெண்களையும், நோயாளிகளையும், நீத்தார் கடன் செய்ய மகனைப் பெறாதவர்களையும் பாதுகாப்பான இடம் செல்லுமாறு சொல்கிறான். அதாவது மேற்கூறியோர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்பதால் அவர்களைத் தாக்காத பெருமையை உடையவன் பாண்டியன் மன்னன் என புகழ்கிறார் நெட்டிமையார் எனும் புலவர். நாம் அறிந்துகொள்வது. சங்கக்காலத்திலிருந்தே பசுக்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன, ஆக்களைக் கொல்வது பாவமென்றே அவற்றைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியுள்ளனர். பசுக்களைப் போன்ற சாதுவான குணமும், பிறர்க்குத் தீங்கறியா மனமும் உடையவர்கள் என்பதால் பார்ப்பனர் காப்பதும் மன்னரின் கடமையே, இது சங்கக்காலத்துத் தமிழன் அறத்திற்கும், அந்தணர்க்கும் தந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. மேலும