பக்திமணக்கும்_தமிழ்மண்-1
கண்ணனுக்கே கண்திருஷ்டி கழித்த மதுரைக்காரர்
ஆறாம் நூற்றாண்டில் கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர் 'பெரியாழ்வார்' எனும் 'விஷ்ணு சித்தர்' ஆவார். ஒருமுறை வல்லபதேவ பாண்டியன் எது சிறந்த சமயம் என்ற வாதத்தை வைக்கவே, பெரியாழ்வார் வாதத்தில் வென்று வைஷ்ணவத்தின் சிறப்பை மதுரை மண்ணில் நிலைநாட்டினார். அரசர் அவரை கௌரவிக்க பட்டத்து யானைமீது ஏற்றி பவனி வரச்செய்ய அப்போது நாராயணன் கருடவாகனத்தில் பெரியாழ்வாருக்குக் காட்சி தரவே, எம்பெருமானின் அழகில் மயங்கி , அவனுக்குக் கண் திருஷ்டி பட்டுவிடக் கூடாதென கண்ணேறு கழித்தார். அதுவே திருப்பல்லாண்டு பாடல்.
" பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு.
இறைவனுக்கே கண்திருஷ்டி கழித்த மதுரைப் பாண்டிய மண்ணின் மாண்பை என்னவென்பேன். மதுரைக்காரன் என்பதில் பெருமை.
Comments
Post a Comment