முதலாம் ஆர்யபடர்

முதலாம் ஆர்யபடர்



உலக அறிவுத் துறையின் வளர்ச்சிக்கு பாரதப் பல்கலைக்கழகங்களே அடித்தளமிட்டன.
இந்திய அறிவியல் அறிஞர்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் ஆர்யபடரே.

முதலாம் ஆர்யபடர்-( காலம்- கி.பி 476- 550).மிகச் சிறந்த வானியல் மற்றும் கணிதவியலாளர்.

இவர் பிறப்பிடம் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன... எனினும் திருவாஞ்சிகுளம் (இன்றைய கேரளத்தில் உள்ளது) ஊரைச் சேர்ந்த தமிழரென்றும் கூறுவர்.

இவரே பூஜ்யத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு வழிகாட்டியவர்.
இவர் நாளந்தா பல்கலைக்கழகத்திற்குத் தலைமை தாங்கினார்.

பீகாரில் தரேகனா என்னும் இடத்திலுள்ள சூரியனார் கோவிலில் கோளரங்கத்தை (planetarium) நிறுவினார்.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கணித முறைகளான arithmetic ,algebra, plane trigonometry, spherical trigonometry, continued fractions, quadratic equations ,table of signs ஆகியவற்றுக்கு அடித்தளமிட்டவர் இவரே.

பூமி தன்னைத் தானே சுற்றும் உண்மையையும், கிரகணம் ஏற்படும் காரணத்தையும் விஞ்ஞானப் பூர்வமாக கூறியவர்.

   தொழில்நுட்பங்கள் வளராக் காலங்களிலேயே ஒரு நாள் என்பது 23- மணி நேரம், 56-நிமிடம்,4.1 -நொடி என்று மிகத் துல்லியமாக கணித்தவர்.

ஆர்யபட்டீயம், ஆர்யசிந்தாந்தம் ஆகிய நூல்களை எழுதியவர்.

இந்நூல்கள்
Al-khwarizmi என்பவரால் அரபி மொழியிலும் Al-zarquali என்பவரால் இலத்தீன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட பின்னரே மேற்கத்திய நாடுகளில் அறிவு வளர்ச்சி தொடங்கியது.

நாம் இன்று திரிகோணமிதியில் பயன்படுத்தும் sine, cosine உண்மையில் ஆர்யபடரது கொடையே.

 sine -jya , cosine- kojya.
Jya என்பதே sine என்றும் , kojya என்பதே cosine என்றும் பிற்காலத்தில் மாறின.

இன்று வரை ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளின் தேசிய நாள்காட்டியாக உள்ள - ஜலாலி(jalali-national calender of iran and Afghanistan) உண்மையிலேயே ஆர்யபட்டரின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டதே.

இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவையே நம் இன்றைய பஞ்சாங்கங்கள்.

30 ஆகஸ்ட் 1765 அன்று பாண்டிச்சேரியில் ஏற்பட்ட சந்திர கிரகணத்தைப் பதிவு செய்த விஞ்ஞானி -Guillaume le gentil தன் கணிப்பை விட 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யபட்டரின் கணிப்பே துல்லியமானதென்று ஒப்புக்கொண்டு புகழ்ந்தார்.

இவரது கண்டுபிடிப்புகளற்ற உலகைக் கற்பனை செய்ய இயலாது.

இத்தகைய காரணங்களுக்காகவே இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபடா -1 என்று பெயரிடப்பட்டது.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்