சங்கத்தமிழ்_காட்டும்_யுத்த தர்மம்-23

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-23

புறநானூறு பாடல் -9 (1-5)

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என

போர் செய்வதற்கு முன்னர் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பசுக்களையும், பார்ப்பனர்களையும், பெண்களையும், நோயாளிகளையும், நீத்தார் கடன் செய்ய மகனைப் பெறாதவர்களையும் பாதுகாப்பான இடம் செல்லுமாறு சொல்கிறான். அதாவது மேற்கூறியோர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்பதால் அவர்களைத் தாக்காத பெருமையை உடையவன் பாண்டியன் மன்னன் என புகழ்கிறார் நெட்டிமையார் எனும் புலவர்.

நாம் அறிந்துகொள்வது.

சங்கக்காலத்திலிருந்தே பசுக்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன, ஆக்களைக் கொல்வது பாவமென்றே அவற்றைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியுள்ளனர். பசுக்களைப் போன்ற சாதுவான குணமும், பிறர்க்குத் தீங்கறியா மனமும் உடையவர்கள் என்பதால் பார்ப்பனர் காப்பதும் மன்னரின் கடமையே, இது சங்கக்காலத்துத் தமிழன் அறத்திற்கும், அந்தணர்க்கும் தந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


மேலும், இறந்த நம் முன்னோர்க்குத் திதி கொடுப்பது சனாதனதர்மத்தின் முக்கியக் கடமையாகும், அதை புதல்வனே செய்ய வேண்டும். வள்ளுவரும் இல்வாழ்க்கை அதிகாரத்தில் 'தென்புலத்தார்' எனும் பித்ருக்களுக்கு வழிபாடு செய்ய வேண்டிய கடமை இல்லறத்தார்க்கு உண்டு என்பதைக் கூறுவார். ஆக திதி செய்ய மகனைப் பெறாத மக்களையும் கொல்லக் கூடாது என்ற அறத்தைத் தமிழர் பினபற்றினர்.




ஆக பசுக்களை, பார்ப்பனரை, தென்புலத்தாரைப் போற்றி சங்கத்தமிழனின் சனாதனதர்ம வழியை நாமும் பின்பற்ற வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்