பக்திமணக்கும்_தமிழ்மண்-2

பக்திமணக்கும்_தமிழ்மண்-2

500 வருடம்  இளையவர்  அண்ணன்?



ஆண்டாளுக்கு அண்ணன் ராமானுஜர் எப்படி?


ஆண்டாளின் 'வாழித் திருநாமப்பாட்டு',
'பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' என்கிறது. அதாவது ராமானுஜருக்கு ஆண்டாள் தங்கையாம்!!!


இதில் அதிசயம் என்னவென்றால் ஆண்டாள் வாழ்ந்தது 7ம் நூற்றாண்டு, ராமானுஜரது காலமோ 12ம் நூற்றாண்டு. ஆக, ராமானுஜர் ஆண்டாளை விட 500 வருடம் இளையவர்!! பின் எப்படி அண்ணன் ஆனார்? பார்ப்போம்.



ஒருமுறை ஆண்டாள் அழகர்கோவில் திருமாலுக்கு 'நூறுதடா வெண்ணெய்யும், நூறு தடா அக்காரவடிசிலும்' தருவதாக நேர்த்திக்கடன் செய்திருந்தாள், ஆண்டாள் நாராயணனோடு இணைந்துவிட்டாள், அதற்குப் பிறகு அந்த நேர்த்திக்கடனை யாரும் செலுத்தவில்லையாம். 500 வருடங்கள் கழித்து வந்த ராமானுஜர் இதை நினைவில் கொண்டு திருமாலிஞ்சோலை அழகனுக்கு ஆண்டாளின் சார்பாக நேர்த்திக் கடனைச் செய்தார். பின்னர் ராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றபோது அவரை எதிர்கொண்டு ஆண்டாளே 'அண்ணனே_வருக' என வரவேற்றார்.இதனால் ராமானுஜருக்கு 'கோயில் அண்ணர்' என்ற மரபும் வந்தது.

தந்தையில்லா இடத்தில் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து சீர் செய்வதும், தங்கையைக் காப்பதும் அண்ணனின் கடமை என்பது தமிழர்தம் பண்பாடு, அதனாலேயே தாய்மாமனுக்கு இங்கு தனி மரியாதையும், பொறுப்பும் உண்டு.

இந்த அழகிய தமிழ் பண்பாடும், பக்தியும் சேர்ந்து ராமானுஜரை ஆண்டாளின் அண்ணன் ஆக்கியது. பக்தியும், பண்பாடும் நமது மண்ணின் சொத்துக்கள்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்