சங்கத்தமிழ்_காட்டும்_கர்மவினை -29

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-29

சனாதனதர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று கர்மவினைக் கோட்பாடு ஆகும். ஒரு மனிதன் இப்பிறவியில் செய்த நன்மையும், தீமையும் அவனைத் தொடர்ந்து வரும், மறுபிறவியிலும் அதற்கேற்ற பலன்கள் வந்தடையும் என்பதே அக்கொள்கை ஆகும். 

அதனால் தான் பாவம் சேர்க்காமல், புண்ணியம் சேர்க்க வேண்டும் என நம் முன்னோர் வலியுறுத்தினர். இக்கருத்து சங்கக்காலம் முதலே தமிழகத்தில் இருந்து வந்தது என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.



புறநானூறு- 134

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அலன்;
பிறகும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்கும் பட்டன்று அவன் கைவண்மையே.

இப்பாடலில் புலவர் ஆய் அண்டிரனை இவ்வாறு புகழ்கிறார்... இந்த பிறவியில் செய்த புண்ணியம், மறு பிறவியல் உதவும், என்றாலும் நீ அதற்கு ஆசைப்பட்டு ந்னமைகள் செய்பவனல்ல மாறாக சான்றோர்கள் செல்லுகின்ற வழியை அப்படியே பின்பற்ற நடப்பவன் என்பதாலேயே நல்வினைகளைச் செய்கிறாய்.

நாம் அறிந்து கொள்வது: தமிழர் பழங்காலத்திலிருந்தே இம்மை, மறுமை எனும் பல பிறவிக் கொள்கையை உடையவர்கள், ஆகவே தமிழர் சமயம் சனாதனதர்மமே!
ஆக, சனாதனதர்ம வழியில் சென்று வீடுபேறு அடைவோமாக.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்