சங்கத்தமிழ்_காட்டும்_பாரதவர்ஷம்-24

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-24

பாரதம் ஆண்ட பாண்டிய மன்னன்.

புறநானூறு-6 பாடல் (1-7)

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரையொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும் ஆனாது.

என்று காரிகிழார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழ்கிறார்.

அதாவது பனிபடர்ந்த இமயத்தை வடக்கேயும், தெற்கே குமரியையும், கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையுமே எல்லையாக்க கொண்ட இப்பெருநிலத்தை (பாரத தேசத்தை) ஆள்கின்ற மன்னவா நின் புகழ் நீர் சூழ் இவ்வுலகிலும், ஆனிலை உலகமாகிய மேலுலகிலும் பரவியுள்ளது.



நாம் அறிந்துகொள்வது.

பாண்டிய மன்னன் பழங்காலத்தில் பாரத தேசத்தையே ஒரு குடையின் கீழ் ஆண்டுள்ளான். இது ஆராயத்தக்க கருத்தாகும். அவ்வாறு புறநானூற்றுப் புலவன் கூறவது உண்மையாயின் புறநானூற்றின் காலம் மிகப்பழையதாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட பாரத தேசம் என்பது தமிழரால் மிகப்பழங்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.




மேலும் பாரததேச்ததை ஆண்ட பாண்டிய மன்னனின் பெயரான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பது அவன் பலயாகங்களை செய்ய வைத்ததை உணர்த்துகிறது. ஆக வேதங்களும், வேள்விகளும் தமிழர் பண்பாடே, அத்தகைய தமிழர் பண்பாடான சனாதனதர்மமே பாரத தேசம் முழுவதும் ஒன்றுபோல காணப்பட்டது என்ற கருத்தை அறியலாம்.



ஆக, பாரத தேசம் தமிழரது தேசமே, பாரத சனாதனதர்ம கலாசாரம் தமிழரது கலாசாரமே!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்