சங்கத்தமிழில் ஸ்வர்க நரகம் -30

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-30

சங்கக்காலத்திலிருந்தே தமிழர்களிடம் சுவர்க்கம், நரகம் பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன என்பதற்கு இப்பாடலே சாட்சி.



புறநானூறு-195

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்;

பொருள்:
சான்றோரைப் பார்த்துப் புலவர் கூறுகிறார், ' முதுமையை எட்டிவிட்ட நீங்கள் நல்வினை செய்யுங்கள், மரணத்தருவாயில் உங்கள் உயிரைப் பறிக்க கொடுமையான ஆயுதங்களை உடைய எமன் வருவான் அப்போது வருந்தி என்ன பயன்? இப்போதே நல்வினைகளை ஆற்றுங்கள், அல்லது தீவினை செய்வதையாவது நிறுத்துங்கள் என்கிறார்.

நாம் அறிந்து கொள்வது:

இந்து புராணங்களின் படி யமன் அஷ்டதிக் பாலர்களில் ஒருவன், மரணத்தின் அதிபதி. தீயவர்களின் உயிரைப் பறிக்க வருபவன் ஆவான். இந்த நம்பிக்கை சங்ககால்தது தமிழனிடத்தே இருந்தது, ஆகவே தீய செய்கைகள் செய்யக் கூடாது என்ற உயர்ந்த சனாதனதர்மக் கருத்துக்களைப் பின்பற்றினான்.

புராணங்கள் அனைத்தும் ஆரியப் புரட்டு என புறந்தள்ளுவோர்க்கு சங்கத்தமிழர் எமனை நம்பிய செய்தி அதிர்ச்சியைத் தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

Comments

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்