சங்கத்தமிழ்_காட்டும்_வர்ணாஸ்ரமம்-25

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-25


சனாதனதர்மம் காத்து நின்ற தமிழ் வேந்தர்கள்.

புறநானூறு பாடல் 6 (16-20)

பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக, பெரும நின்சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!

பொருள்-
எதிரிகளுக்கு முன் உனது வெண்கொற்றக் குடை பணியாது, ஆனால் முக்கண்ணனாகிய சிவபிரானது கோவிலை வலம்வரும்போது மட்டும் நின் குடை பணியும், யார் முன்னும் வணங்கா நின் தலையானது மறை ஓதும் அந்தணர் முன்னர் மட்டும் வணங்கும்
என்று காரிகிழார் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றுகிறார்.


நாம் அறிந்துகொள்வது.

சனாதனதர்மத்தில் மன்னனுக்கு உயரிய இடமுண்டு என்றாலும், அவன் தெய்வ நம்பிக்கை கொண்டவனாகவும், தெய்வத்தை மதிப்பவனாகவும், நான்கு மறைகளான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் கற்ற முனிவரையும் , அந்தணரையும் வணங்கி, அவர் சொற்படி நடக்க வேண்டும். இதை முதுகுடுமிப் பெருவழுதி செவ்வனே செய்து போற்றத்தக்கவன் ஆனான்.



இதன்மூலம் தமிழர்கள் தம் கடவுளுக்கும், நான்கு மறைகளுக்கும் தந்த உயரிய இடம் புலனாகிறது.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்