சங்கத்தமிழில் ராமாவதாரம்-27

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-27

சனாதனதர்மத்தின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க இதிஹாசங்கள் உதவின. இறைவனே மனிதனாக அவதரித்து மாந்தர் வாழ்வதற்கான நெறியைக் காட்டினார். அதுவே இராமாயணம் ஆகும். கம்பருக்கு முன்பே ராமகாதை தமிழகத்தில் ப்ரபலமாக இருந்திருக்கின்றது. மேலும் இராமகாதை உண்மையான வரலாறே என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.



நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த சங்கப்புலவன் இவ்வாறு பாடுகிறான்.

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே

 (அகநானூறு 70: 13-17).

அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒலி செய்து தொந்திரவு செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற அமைதியை நகரம் அடைந்தது.


இதன்மூலம் ஸ்ரீராமன் வாழந்ததும், வானர சேனையோடு தனுஷ்கோடி வந்ததையும், இலங்கை மீது படை எடுத்ததையும் உண்மையில் நடந்த வரலாறே என சங்கப்புலவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்