சங்கத்தமிழில் மஹாபாரதம்-26
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-26
மஹாபாரதம் சனாதனதர்மத்தின் மிக முக்கிய இதிகாசமாகும், உலகின் மிகப் பெரிய காவியமும் ஆகும். அது நடந்தது உண்மையா? ஆம், ஆதாரம் புறநானூற்றில் உள்ளது.
புறநானூறு-2 (13-16).
அலங்குளை புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம்பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்.
என்று இப்பாடல் உதியன்சேரலாதனின் ஈகைக் குணத்தைக் கூறுகிறது. அதாவது ஐவராகிய பாண்டவரும், ஈரைம்பது- நூறு கௌரவரும் போர் செய்த பாரதப் போரில், அப்பெரும் படைக்கு உணவைச் சேரலாதன் தந்துள்ளான். அது பற்றியே அவனுக்குச் 'சேரமான் பெருஞ்சோற்று உதியன்சேரலதன்' எனும் பெயரும் கிடைத்துள்ளது.
மேலும் புறநானூற்றின் கடவுள் வாழ்ததுப் பாடியவர் பெருந்தேவனார் ஆவார். தமிழில் முதன்முதலில் மஹாபாரதத்தை இயற்றியதால் இவரை 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்று அழைப்பர்.
இவற்றின் மூலம் மஹாபாரதம் நடந்தது உண்மையே என்பதும், அதில் தமிழ் மன்னர்களது பங்கும் இருந்தது என்பதும் உணரப்படுகிறது.

Comments
Post a Comment