சங்கத்தமிழ்_காட்டும்_வீரஸ்வர்கம் - 45
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 45 வீரசுவர்கம் குறித்த நம்பிக்கைகள் இந்துக்களிடையே மிகுந்த வலிமை வாய்ந்தவை, போரில் வீரமரணம் அடையும் வீரன் வீரசுவர்கம் அடைவான் என்று பண்டைய தமிழ் மக்களும் நம்பினர். வட இந்தியர்களிடமும் இதே நம்பிக்கை உள்ளது. புறநானூறு 93 வரி 7-11 அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என வாழ்க போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ அதியமானது பெருமையைப் பாட வந்த ஔவையார் ' உன்னிடம் தோற்ற ஓடிய பகைவர்கள், போரில் இறக்காமல் பெருமை இழந்தனர் அதை ஈடுகட்ட அவர்கள் இறந்த பின் அறம்செய்கின்ற நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள், பசும்புல்லான தர்பையைப் பரப்பி, அதன் மீது அவர்களது (போரில் வீரமரணம் அடையாதவரது) உடலை வைத்து, வாளால் மார்பை வெட்டி, 'கழல் அணிந்த வீரமரணம் அடைந்த மறவர்கள் சென்ற வீரசுவர்கத்திற்கே நீயும் செல்வாயாக என்று வாழ்த்துவர். அத்தகைய இழி நிலை உனக்கில்லை, உன்னைப் பகைத்தவர்களுக்கு ஏற்பட்டது என்கிறார். ஆகவே, பாரத தேசம் முழுவதும் ஒரே மாதிரியான வீரசுவர்கம் குறித்த நம