Posts

Showing posts from 2016

விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா?

Image
விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா? இல்லை.... பௌதத்திலும், சமணத்திலும் அவருக்கு உயரிய இடம் உள்ளது. கணேஷ சஹஸ்ரநாமமத்தில் புத்தா என்பதே விநாயகரின் பெயராக வருகிறது. ஸ்வேதாம்பர ஜைனர்கள் கடவுளர்களுக்கே கடவுளாக விநாயகரைப் போற்றுகின்றனர். ரோமானிய கடவுளான ஜானஸ் (இருமுகம் உடையவர்) நமது விநாயகரின் ஒரு வடிவமான 'த்விமுக விநாயகரோடு' நெருங்கிய தொடர்பு உள்ளது. இலங்கை, பாகிஸ்தான், சீனா, திபெத், மங்கோலியா, பர்மா, கம்போடியா, ஜாவா, சுமத்ரா, வியட்னாம் ஆகிய நாடுகளில் விநாயகர் இன்று வரை வணங்கப்படுகிறார். ஜப்பானில் 'காங்கிடென்' என்ற பெயரில் போற்றப்படுகிறார். இந்தோனேசியாவில் ரூபாய் நோட்டிலும், பல்கலைக்கழக முத்திரையில் அருளுகிறார். அகண்ட பாரத தேசத்தின் அடையாளமாக, பெரிதும் போற்றப்படும் தெய்வமாக நமது பிள்ளையார் விளங்குகிறார். . விநாயகர் தடைகளை நீக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். பாரத தேசம் மட்டுமின்றி அகண்ட பாரதத்திலும் தன் ஆதிக்கம் செலுத்துகிறார். இதோ தாய்லாந்து நாட்டில் உள்ள பிரமாண்டமான கணபதி சிலை. இந்தோனேசியாவின் பாலித் தீவில் இன்றளவும் இந்துதர்மமே பின

எந்நாட்டவர்க்கும் இறைவன் எம் முருகன்!!!

Image
முருகப் பெருமான் தமிழருக்கு மட்டும் கடவுள் அல்ல...இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர் வணங்கப்படுகிறார்!  வங்காள முருகன்  உதாரணமாக வங்காளத்தில் துர்கா பூஜையின் போது முருகனை வணங்குவர்! அங்கு கார்த்திகேயன் என்ற பெயர் அவருக்கு! முருகன் கிரேக்க, ரோமானியர்க்கும் தலைவனா? சங்க இலக்கியங்கள் முருகனை வெற்றியின் தெய்வமாகக் காட்டுகின்றன. சம்ஸ்கிருத இலக்கியங்களும் முருகனை அசுரர்களை வெல்ல வந்தவன் என்றும், தேவர்களின் சேனாதிபதி என்றும் குறிப்பிடுகின்றன. முருகன் போர்த்தெய்வமாக காட்டப்படுகிறார், தீயிலிருந்து தோன்றியராகவும், ஜோதிடத்தில் செவ்வாயின் அதிபதியாகவும் காட்டப்படுகிறார். செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி, மேஷம் என்பத ு ஆடாகும், சில ஆலயங்களில் முருகனுக்கு ஆடு வாகனம் காட்டப்படுகிறது. முருகன் இந்துமதத்தின் ப்ரதான தெய்வமான சிவனது மகன். அவரது நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வந்த சிவந்த மேனியன் என்கின்றன புராணங்கள். அதேபோல் கிரேக்க தெய்வம் ஏரிஸ் (ஆங்கிலத்தில் மேஷ ராசியை ஏரிஸ் என்பர்) ஜீயுஸ் எனும் தலைமைக்கடவுளின் மகன். (ஜீயுஸ் என்பது ஜூபிடர்- வியாழனைக் குறிக்கும். நமது புராணங்

சங்கத்தமிழில் அணுக் கொள்கையும் ஆன்மிகமும் - 18

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-18 அணுக்கொள்கையை வகுத்தவன் தமிழனே!!! இதோ ஆதாரம். திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார் அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும் வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே? (பரிபாடல்-55). பொருள்- திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ (திருமால்) உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர். தெளிவுறை: இறைவன் என்பவன் அனைவருக்கும் முதலானவன், பொதுவானவன். அவன் தன்னைச் சரணடைந்தோரைக் காப்பான். அதாவது தீய குணமுள்ள அரக்கர்களைப் போன்ற மனிதராயினும் தம் தவறுணர்ந்து இறைவனிடம் சரணடைந்தால், அவன் தீயோரையும் நல்லோராக்கிக் காப்பான் என்ற சனாதனதர்மக் கருத்தை இப்பாடல் நிறுவுகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில

சங்கத்தமிழ் காட்டும் பக்தி - 17

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-17 பக்தி இலக்கியங்களின் முன்னோடி சங்க இலக்கியங்களே! உதாரணமாக இப்பரிபாடலை எடுத்துக் கொள்வோம். அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் அன் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால் இன்னும் இன்னும் எம் காமம் இதுவே. (பரிபாடல்-64).  பொருள்-  முற்பிறப்புக்களில் நாங்கள் செய்த தவத்தால் உன்னை அன்னை எனக் கருதி பலமுறையும் உன் தாளைத்தொழுது வணங்கும் பேறு பெற்றோம்! உன்னைப் பலமுறையும் வாழ்த்தி இறைஞ்சுகிறோம்! இனி வரும் பிறவிகளிலும் இவ்வாறே நாங்கள் இருப்பதையே விரும்புகின்றோம். அவ்வண்ணமே அருள்வாயாக! சனாதன இந்து தர்மத்தின் சிறப்பம்சமே 'இறைவனைத் தான் விரும்பும் உருவாகவும், உறவாகவும் காணலாம்' என்பதே. இறைவனை தம் நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் காண்பதை 'நாயகி பாவம்' என்போம். இதையே ஆண்டாள் தன் திருப்பாவையில் கையாண்டாள். சைவர்கள் சிவனை 'தாயுமானவராகக்' காண்கின்றனர். அதைப்போலவே இப்பாடல் திருமாலை நம் தாயாகக் காட்டுகிறது. இதன் மூலமாக சங்கக்காலத்திலேயே பக்தியில் தமிழர் சிறந்திருந்ததை உணரலாம்.ஆக, சங்கத்தம

சங்கத்தமிழ் காட்டும் ஜோதிஷம்-16

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-16 வைகை வெள்ளத்திற்குக் ஜாதகம் கணித்த சங்கப்புலவன். ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்கள் வாழ்வியலில் இரண்டறக் கலந்ததாகும், இதன் அடிப்படையே வான சாஸ்திரம் ஆகும்.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர் கொண்டிருந்த வானவியல், ஜோதிட அறிவை பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனார் கூறுகிறார். விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல் அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்குப் பால்எய்த இறையமன் வில்லிற் கடைமகரம் ஏவப் பாம்பொல்லை மதிய மறைய வருநாளில் வாய்ந்த பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால் புரைகெழு சையம் பொழிமழை தாழ நெரிதரூஉம் வையைப் புனல்… வைகையில் புதுவெள்ள வருகைக்கு ஜாதகம் கணித்திருக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். ஆற்று வெள்ளம் பயனுடையதாக இருக்குமா வேறு விதமாக இருக்குமா என்று தெரிந்

சங்கத்தமிழ் காட்டும் திருக்கார்த்திகை-15

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-15 திருக்கார்த்திகை தீபம் இறைவனை ஒளிவடிவமாக காண்பது பாரத தேசத்திலிருந்தே பிறந்த வழக்கமாகும். வடக்கே தீபாவளி போல தமிழ்நாட்டில் கார்த்திகை. திருக்கார்த்திகை திருவிழா பல்வேறு புராணப் பின்னணிகளை உடையது, அகநானூற்றில் வரும் இப்பாடல் பழந்தமிழர் கார்த்திகை விழா கொண்டாடியதைக் காட்டுகிறது. மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின் குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141). அக்னியை, தீப ஒளியை கடவுளாகக் காண்பது வேத உபநிஷதங்களிலும் உள்ள வழக்கமாகும். உபநிஷதங்களிலேயே மிகவும் பழையது #பிருஹதாரண்யக உபநிஷத்! அதில்“இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்” -- என்று வேண்டுகிறோம் (தமஸோ மா ஜோதிர் கமய). ஆக, இன்றும் வடநாட்டில் குறிப்பாக காசியில் கார்த்திகை பௌர்ணமி தேவதீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஜைன மதத்தவரும் இதைக் கொண்டாடுகின்றனர். அதனால் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி ஒட்டுமொத்த பாரததேசத்தில் கொண்டாடப் பெறும் கார்

சங்கத்தமிழ் காட்டும் மதுரையின் வடிவம்-14

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-14 சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமையை உடையது மதுரை மாநகராகும். இன்றளவும் தமிழகத்தின் கலாசாரத் தலைநகரமாக இருப்பது மதுரையே!!! அத்தகைய சிறப்பினை உடைய மதுரையின் தாமரை வடிவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத்தமிழ்ப்புலவர் பரிபாடலில் இவ்வாறு பாடுகிறார். மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவம் இதழகத் தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் பொருள்-  மதுரைநகரம் திருமாலின் உந்தியின்மலர்ந்த தாமரை மலரை போன்றுள்ளது. அந்நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை போன்றுள்ளது; பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை போன்றுள்ளது. நாம் அறிந்துகொள்வது- பார்க்கின்ற அனைத்திலும் பரம்பொருளைப் பார்ப்பதே நம் பாரதப் பண்பாடாகும். தான் வாழ்கின்ற ஊரின் வடிவத்தையே இறை அம்சம் பொருந்தியதாகப் பார்க்கின்ற இப்பண்பு சனாதனதர்மத்திற்கு மட்டுமே உரியது என்பதை உணர்ந்தால் சங்கத்தமிழரின் சமயம் சனாதனமே என உணரலாம். மேலும் இப்பாடல் மூலம் திருமால் தமிழரது தெய்வமே என்று நிறுவலாம்.

சங்கத்தமிழ் காட்டும் நாற்பெருந் தெய்வம்-13

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-13 உலகைக் காக்கும் நான்கு தெய்வங்கள் யாவர்? இதோ புறநானூறு -பாடல்- 56 ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; மண்ணுறு திரு மணி புரையும் மேனி,     விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், மணி மயில் உயரிய மாறா வென்றி, பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல் இசை, நால்வருள்ளும்,               கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; வலி ஒத்தீயே, வாலியோனை; புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின்,யாங்கும்                             அரியவும் உளவோ, நினக்கே?             திணை -பாடாண் திணை; துறை- பூவை நிலை பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு உலகைக் காக்கும் நால்வர் போன்றவன் இந்த நன்மாறன். பொருள்- காளைமாட்டு ஊர்தி, தீ போன்ற

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-12 இந்திரன்

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-12 இந்திரன் தமிழ்க்கடவுளே!!! வேதம் தமிழருடையதே!!! ஆம், 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்கிறது தொல்காப்பியம். ரிக் வேதத்தில் அதிகமான பாடல்களில் புகழப்படுபவர் இந்திரனே ஆவார். ஆரிய?! இந்திரனுக்குத் தமிழன் சோழர்கள் 28 நாள் விழா எடுத்தனரே (சிலப்பதிகாரம்). ஆக தமிழரும் வடவரும் ஒரே சமயத்தவரே வேதசமயத்தவரே இன்றும் நேபாளில் இந்திரவிழா கொண்டாடப்படுவதே அதற்குச் சான்று. மேலும் போரில் இறந்தோர்க்கு வீரசுவர்க்கம் கிட்டும் என்பது பாரத தேசத்தின் வெகு மக்களின் நம்பிக்கை. கீழுள்ள புறநானூற்றுப் பாடல் இந்திரன், வீரசுவர்கம் பற்றிய குறிப்பையும் தருகின்றது. திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார் அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசும் கறங்க ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே (புறநானூறு-241) இதன் பொருள்:- வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில், போர்த்தப்பட்ட

சங்கத்தமிழ் காட்டும் சைவ-வைணவ ஒற்றுமை -11

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-11 இந்து என்கிற பெயர் காலத்தால் பிந்தியது...இந்து என்கின்ற மதமே இல்லை என்றெல்லாம் சிலர் கூறிவருகின்றனர். இந்து எனும் சொல் குறித்த ஆய்வு இப்போதைக்குச் செய்யப்போவதில்லை..அது அடுத்த பகுதியில் பாப்போம். சைவமும் வைணவமும் உள்ளடக்கிய வேதநெறியும், தாய்தெய்வ வழிபாடும், நடுகல் போன்ற வீரவழிபாடுகளும், தமிழர் சமயமாக இருந்தன. இவை மொத்தமாகவே இந்து என்கிற பொதுச் சொல்லால் அறியப்பட்டன என்பது பொதுவான புரிதல். இந்துமதத்தின் பெரும் பகுதிகள்..(பிரிவுகள் அல்ல) சைவம் மற்றும் வைணவம் ஆகும்.சைவ வைணவ பூசல் சங்கக்காலத்தில் இல்லை. பக்தி இயக்கம் தோன்றி செழித்த பின் சிற்சில பூசல்கள் தோன்றின. ஆனால் பிற்கால நாயகர்கள் ஆட்சியில் அவையும் மறைந்தன. சிதம்பரத்தைத் தன் குலநாயகம் என்று போற்றிய அதே சோழர் தான் குலதனமான ஸ்ரீரங்கநாதருக்கு உலகின் மிகப்பெரிய செயல்படும் கோவிலைக்கட்டினர். அதேபோல் நங்கசோழன் என்னும் தீவிர விஷ்ணு பக்தன் மஹாலக்ஷ்மித் தாயாரையே தன் மகளாகப் பெற்றார். கமலவல்லி என்று பெயரிட்டு அவரை அரங்கனுக்கே மணமுடித்தார்.ஆகவே அரங்கன் சோழர்களின் மருமகன் ஆனார். அதேபோல சங்கக்கா

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-10 திருவாதிரை

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-10 சங்கத்தமிழர் கொண்டாடிய திருவிழாக்கள் பல அவற்றுள் முக்கியமானது மார்கழி திருவாதிரை ஆகும். அதை... ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில் பரிபாடல்2:76-87 ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து, மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என- 80 அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர், முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர் நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், -85 தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர, வையை! நினக்கு மடை வாய்த்தன்று. மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து, பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, -90 மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும்

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-9 பலதேவர்

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-9 இன்று அநேகமாக இஸ்கான் கோவில்களில் மட்டுமே சங்கக் காலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பழந்தமிழ் தெய்வங்களான கிருஷ்ணனும், பலராமனும் இணைந்து உள்ளனர். திருமாலிஞ்சோலையில் (அழகர்கோவில்) திருமாலோடு பலராமன் கோயில் கொண்டுள்ளான் என்கிறது பரிபாடல் (15). கபிலர் நற்றிணையில் (32) குறிஞ்சித்திணை பாடலில் "மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி" என்று திருமாலுடன் (மலை போன்ற கரும்பச்சை நிறமுடையவன்) வெள்ளருவி நிறமுடைய பலராமனையும் குறிப்பிடுகிறார். ஒருகாலத்தில் தமிழகத்தில் புகழ் பெற்றிருந்த பலராம வழிபாடு இன்று இல்லாத போதிலும்... தமிழ்ப் பெயர்களான 'வெள்ளையன்', வெள்ளைக்கண்ணு, வெள்ளைச்சாமி, மதுரை வட்டாரங்களில் வழங்கப்படும் உலக்கையன், முத்துலக்கையன் போன்றவை பலராமனைக் குறிப்பவை இப்பெயர்கள் இன்றளவும் வழங்கப்பெறுவது பலராம வழிபாடின் மிச்சமே. ஆக, பாரத தேசம் முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுவது தமிழரிடமிருந்து பரிணமித்த சனாதனதர்மமே.

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-8 ராவணன்

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-8 இராவணன் தமிழனா? அசுரனா? இராமர் கம்பரால் தமிழருக்கு அறிமுகமானவரல்லர். ஸ்ரீராம்பிரானின் வரலாற்றை சங்கத்தமிழர் நன்று அறிந்திருந்தனர். எந்த அளவு என்றால் வெகு சாதாரணமாக உவமையாகப் பயன்படுத்தும் அளவு. ஆதாரம்- இளஞ்சேட்சென்னி என்ற மன்னனைப் பாணர்கள் பாடிப் பரிசில் பெறுகின்றனர்.அவற்றுள் அணிகலன்களும் செல்வமும் அடங்கும். தாங்கள் பெற்ற அணிகளுள் விரலுக்குரிய மோதிரத்தைக் காதுக்கும், காதுக்குரியதை விரலுக்கும், இடையில் அணிவதைக் கழுத்துக்கும், கழுத்துக்குரியதை இடைக்குமாக இப்படி மாறி மாறி அணிந்து கொள்வது வேடிக்கை ஆகவும், நகைப்புக்கு இடமாகவும் உள்ளது. எப்படி? கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன் செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே புறநானூறு ( 378: 18-22) (மதரணி = ஒளிரும் அணிகலன், அரக்கன் = இராவணன், வௌவிய = கவர்ந்த, பெருங்கிளை = குரங்குக் கூட்டம், இழை = அணிகலன்) இராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளை

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-7 வேதம்

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-7 தமிழர் வேதசமயத்தவரே சனாதனதர்மத்தின் மூலநூல் வேதங்கள் எனும் மறைநூலாகும். வேதங்களுக்கு நம் சங்கத்தமிழ் முன்னோர் தந்த முக்கியத்துவத்தைப் பின்வரும் பரிபாடல் கூறுகிறது. பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12 பூவினுள் பிறந்தோன்- பிரம்மா, திருமாலின் திருநாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மன் என்ற புராணச் செய்தி, தமிழர் இந்து புராணங்கள் மேல் கொண்ட பற்றை விளக்குகிறது. பொருள்: நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி கோழியும்- உரையூர்- சோழ தலைநகர் கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ. உரை: பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார் சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர், ஆனால் சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மக்கள் நாங்களோ அந்தணர் ஓதும்  அருமறையின் த

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-6 முருகன்

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-6 ஆறாவது பதிவு ஆறுமுகன் பற்றியது. ஆரிய முருகன் முருகன் தமிழ்க்கடவுள், பிற்காலத்தில் ஆரிய அரிதாரம் பூசப்பட்டு திருமாலின் மருகனாக, ஆரிய இந்திரனின் மகள் தேவசேனாவின் பதியாக ஆக்கப்பட்டார் என்ற சிலரது கூற்றைத் தவிடு பொடி ஆக்குகிறது இந்த பரிபாடல். திருப்பரங்குன்றம் பற்றிய வர்ணனை இது. குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் கரும்பு கருமுகக்கணக்கு அளிப்போரும் தெய்வப் பிரமம் செய்குவோரும் கைவைத்து இமிர்பு குழல் காண்குவோரும் யாழின் இளிகுரல் சமம் கொள்வோரும் வேள்வியின் அழகியல் விளம்புவோரும் கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப ஊழுற முரசின் ஒலி செய்வோரும் என்றூழ் உற வரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர் நிலை உள்படுவாரும் இரதி காமன் இவன் இவள் எனாஅ விரகியர் வினவ வினாவிறுப்போரும் இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும் இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டறிவுறுத்தவும் நேர்வரை விரியறை வியலிடத்திழைக்கச் சோபன நிலையது துணி பரங்குன்றத்து மாஅல் மருகன் மாட ம

சங்கத்தமிழ் காட்டும் திருவோணம்-5

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-5 திருவோணம் தமிழர் திருநாளே!!! தமிழரது மெய்யியலை மறைக்க சில தமிழ் வேஷதாரிகள் பொங்கல் பண்டிகையை மட்டுமே (அந்தளவு கடவுள் தொடர்பற்று இருப்பதால்) தமிழர் திருநாள் என்கின்றனர். அவர்தம் நோக்கம் தமிழரது சமய அடையாளங்களை அழிப்பது... நமது நோக்கம் தமிழரின் உண்மையான சமயத்தை மீட்பதே! திருவோணம் தமிழர் திருநாளே!!! கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் #ஆவணி மாதம் அஸ்த(ஹஸ்த) நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது. இன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்வோணம் பண்டிகை, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக, மதுரையில் நடைபெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாகப் பாடியுள்ளார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், அதனை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விழாக் கொண்டாடியதாகவும் க