Posts

Showing posts from 2017

சங்கத்தமிழில் வாமன அவதாரம்- 47

Image
சங்கத்தமிழ்_ காட்டும்_சனாதனதர்மம்- 47 சங்கப்பாடல்களில் பல்வேறு இடங்களில் திருமால் போற்றப்படுகிறார். இதில் வாமன அவதாரக் குறிப்பும் உண்டு. முல்லைப்பாட்டு (1-3) நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல தனது பெரிய கரங்களில் சங்கும், சக்கரமும் உடையவனாகிய திருமால் அன்றொருநாள் மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு வந்து , தானமாகப் பெற கையில் தாரை நீரை வாங்கிக் கொண்டே... தனது குள்ள உருவிலிருந்து ப்ரமாண்டமாக த்ரிவிக்ரமனாக  வளர்ந்தார். அவரைப் போல கடலிலிருந்து நீரை உறிந்து கொண்டு வானத்தில் மழை மேகங்கள் எழுந்தன. இப்பாடல் மூலம்  வாமன அவதார நிகழ்வானது பண்டைய தமிழர் அறிந்து , பதிவு செய்துள்ளனர் என்பதை அறியலாம். இதே புராணச் செய்தியைத் திருவள்ளுவரும் பதிவு செய்கிறார். மடியிலா மன்னவன் எய்தும்டி அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. அதாவது சோம்பல் இல்லாத முயற்சியை உடைய அரசன் 'வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாக வளர்ந்து' உலகளந்த உத்தமன் திருமால் தன் திருவடிகளால் அளந்த மூவுலகையும் கைப்பற்றுவான் என்கிறார். ஆக, திருமா

சங்கத்தமிழில் மஹாபாரதம் - 46

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 46 இதிஹாசங்கள் சனாதனதர்மத்தின் முக்கியமான அங்கங்களாகும், அதிலும் உலகின் மிகப் பெரிய காவியமான மஹாபாரதம், எண்ணற்ற அறங்களைத் தன்னுள் கொண்டதாகும். சங்க இலக்கியங்களில் மகாபாரதக் குறிப்புகள் பல உள்ளன. பெரும்பாணாற்றுப்படை (415 - 417) 'ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்து அவிய பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர் ஆராச் செருவின் ஐவர் போல' மன்னன் இளந்திரையனைப் புகழ வந்த புலவர்               'ஈர் ஐம்பது பேராகிய நூறு கௌரவர்களுடன் களத்திலே சண்டையிட்டு வென்ற பெரிய தேர்களை உடைய பாண்டவர்களைப் போல போர் என்றாலே வெற்றியை மட்டுமே கண்டவன்' என்று புகழ்கிறார். அதாவது இதிலிருந்து மிகத் தெளிவாக மகாபாரதக் கதை சங்கக்காலத்திலேயே தமிழரிடம் வழங்கி வரப் பெற்றது என்பதையும், மன்னர்களைப் பாண்டவரோடு ஒப்பிடுவதால், பாண்டவர்கள் பழந்தமிழரால் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப் பட்டனர் என்பதையும் அறியலாம். மகாபாரதமானது பாரத மக்களின் ரத்தத்தில் ஊறிப் போனதாகும். அதனால் தான் சங்கக்காலம் தொடங்கி, இன்றும் தமிழரிடையே மிகப் பெரிய செல்வாக்குடன் வழங்கப் பெறுகிறது. 

எது தமிழர் பண்டிகை?

Image
எது தமிழர் பண்டிகை? இதற்கான அளவீடு தமிழர்கள் மட்டுமே (வடநாட்டுக்காரர்கள் கொண்டாடாத)  கொண்டாடுகிற பண்டிகை என்பதல்ல... சங்கக்காலத்திலிருந்தோ அல்லது குறைந்தபட்சம் ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தோ தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பதே ஆகும். உதாரணமாக பழந்தமிழர் சந்திர நாள்காட்டியையே பயன்படுத்தினர், அதன்படி பௌர்ணமியே மாதப் பிறப்பு, எல்லா பௌர்ணமியும் விழா நடைபெற்றது. அதன்படி பார்த்தால் 'தமிழர் திருநாள்'  என்று கூறப்படும் பொங்கல் வெறும் 1000 வருட வரலாறே உடையது. சோழர்கள் சூர்ய நாள்காட்டியையே அறிமுகம் செய்த பின்பு தான் தைப் பொங்கல். அதுவும் வடக்கில் 'மகர சங்கராந்தி'. தைப் பூசமே சோழர்கள் சூர்ய நாட்காட்டி கொண்டு வரும் முன் வரை தை - 1. தை நீராடல் என்பது சங்கக்காலத் தமிழ் பாரம்பரியம்.. இன்றும் வடநாட்டில் 'பௌஷ்ய பூர்ணிமா' எனும் பெயரில் தைப்பூசத்தன்று புண்ணிய நதிகளில் நீராடுகின்றனர். தமிழருக்குப் பண்டிகை நாட்கள் பெரும்பாலும் பௌர்ணமியே.. அதன்படி.. மாசி மாதம் வரும் பௌர்ணமியே நாம் கொண்டாடும் மாசி மகம், இதை வடநாட்டில் கும்ப மேளாவாகக் கொண்டாடுகின்றனர். உல

சங்கத்தமிழ்_காட்டும்_வீரஸ்வர்கம் - 45

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 45 வீரசுவர்கம் குறித்த நம்பிக்கைகள் இந்துக்களிடையே மிகுந்த வலிமை வாய்ந்தவை, போரில் வீரமரணம் அடையும் வீரன் வீரசுவர்கம் அடைவான் என்று பண்டைய தமிழ் மக்களும் நம்பினர். வட இந்தியர்களிடமும் இதே நம்பிக்கை உள்ளது. புறநானூறு 93 வரி 7-11 அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என வாழ்க போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ அதியமானது பெருமையைப் பாட வந்த ஔவையார் ' உன்னிடம் தோற்ற ஓடிய பகைவர்கள், போரில் இறக்காமல் பெருமை இழந்தனர் அதை ஈடுகட்ட அவர்கள் இறந்த பின் அறம்செய்கின்ற நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள், பசும்புல்லான தர்பையைப் பரப்பி, அதன் மீது அவர்களது (போரில் வீரமரணம் அடையாதவரது) உடலை வைத்து, வாளால் மார்பை வெட்டி, 'கழல் அணிந்த வீரமரணம் அடைந்த மறவர்கள் சென்ற வீரசுவர்கத்திற்கே நீயும் செல்வாயாக என்று வாழ்த்துவர். அத்தகைய இழி நிலை உனக்கில்லை, உன்னைப் பகைத்தவர்களுக்கு ஏற்பட்டது என்கிறார். ஆகவே, பாரத தேசம் முழுவதும் ஒரே மாதிரியான வீரசுவர்கம் குறித்த நம

சங்கத்தமிழ்_காட்டும்_அந்தணர் - 44

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 44 பதிற்றுப்பத்து பாடல் எண் 24 வரி 6-9 ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞாலம் நின்வழி யொழுகப் பாடல்சான்று அதாவது வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், பிறரை வேதம் ஓதச் செய்தல், வேள்வி செய்ய வைத்தல், பிறர்க்கு ஈதல், தகுதியுடையோரிடம் தானம் பெறுதல் ஆகியவை அந்தணர்களுக்குரிய அறங்களாகும். இவற்றைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் காட்டிய வழியில் செல்பவன், அவர்கள் கூறுவதை வழிமொழிந்து ஆண்டவன் சேரமன்னன், அவனது ஆணையை ஏற்று தான்  உலகமே நடக்கிறது என்று புலவர் போற்றுகிறார். ஆகவே, சங்கத்தமிழ் மக்களிடையே மன்னனே உயர்நிலை பெற்றவனாயினும், அவன் அறவழியில் செல்ல துணை நிற்க வேண்டியது அந்தணர்களே, இதுவே பிற்காலத்தில் 'வர்ணாஸ்ரம தர்மம்' என்ற பெயர் பெற்றது. ராஜகுரு என்பவரே அரசனுக்கு வழிகாட்டினார், அதனால் தான் அரசனும் தர்மத்தின் வழி நின்றான், மக்களும் இன்புற்று வாழ்ந்தனர். 

சங்கத்தமிழில் ஜோதிஷம் - 43

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 43 இன்றும் எந்த விஷயங்களையும் நாள், கோள் பார்த்துச் செய்வது இந்துக்களின் வழக்கமாகும். கிரக நிலை வைத்து இவ்வருடம் மழை எப்படி இருக்கும் என்று  இந்நாட்களில் கணிக்கிறோம்.  இது பண்டைய சங்கத்தமிழ் மக்களிடையே இருந்ததா? பார்ப்போம். பதிற்றுப்பத்து பாடல் எண் 13 வரி 25,26 அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழை வேண்டு புலத்து மாரிநிற்ப சேர நாட்டின் மழை வளமானது சேரமன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக இருந்தது என்பதைப் புலவர், வெள்ளி கிரகத்தோடு அழல் (செவ்வாய்) கிரகம் சேராமல் வேண்டிய இடங்களில் எல்லாம் மழை பெய்தது என்று கூறியுள்ளார். அதாவது சுக்கிரன் மழை தரும் கோள் ஆனால் அதனோடு செவ்வாய் கிரகம் ஒரே ராசியில்  சேர்ந்தால் மழை கெட்டுவிடும் - பெய்யாது. ஆனால் சேரமன்னனின் நல்லாட்சியில் அவ்வாறு நடக்கவில்லை, வேண்டிய இடத்தில் எல்லாம் நல்ல மழை பெய்தது என்று புலவர் தெளிவாக விளக்குகிறார். இவ்வளவு நுட்பமாக கோள் நிலையை ஆராய்ந்து, அதைப் பின்பற்றினர் சனாதனதர்மம் ஏற்றிருந்த சங்கத்தமிழ் மக்கள். ஆகவே, ஜோதிஷ சாஸ்திரம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்றோ, ஆரிய புரட்டு என்றோ கூற

சங்கத்தமிழில் சிபிச்சக்ரவர்த்தி - 42

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 42 சோழ மன்னர்கள் யாருடைய மரபினர்? புறநானூறு பாடல் எண் 43 வரிகள் 7-10 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! இப்பாடலில் புலவர் சோழ மன்னன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் என்று கூறியுள்ளார். நற்றிணை - 16, அகநானூறு - 36 ஆகிய பாடல்கள் சோழர்களைச் செம்பியன் என்கின்றன. சிபி என்பதே செம்பியன் என்று திரிந்தது. இப்பாடல் சிபிச் சக்ரவர்த்தி புறாவைக் காப்பாற்ற தன் சதையைத் தந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. உண்மைக் கதை- (சிபிச் சக்ரவர்த்தியின் ஈகை குணத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது.. ஆகவே அவனைச் சோதிக்க இந்திரன் புறாவாகவும், எமதர்ம ராஜன் கழுகாவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தவே சிபியுடம் அடைக்கலம் அடைந்தது புறா, புறாவைக் காப்பாற்ற புறாவின் எடைக்கு நிகரான  தன் சதையை தந்தான் சிபி. தராசில் தன் சதையை எவ்வளவு வெட்டி வைத்தும் புறாவின் எடைக்கு நிகரான சதையைத் தர முடியாமல் தன்னையே, தன் முழு உடலையும் தந்தார் சிபி. சிபியை மெச்சி காட்சி தந

சங்கத்தமிழ்_காட்டும்_முருகவழிபாடு - 41

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 41 சங்கக்காலத்தில் முருக வழிபாடு பற்றிக் காண்போம் திருமுருகாற்றுப்படை பாடல் வரிகள் 181-189 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன் அதான்று ஏரகம் எனும் படை வீட்டில் உறையும் முருகப்பெருமானை 'மூன்று வகையான தீயை - யாகம் வளர்ப்போரும், ஒன்பது நூலை மூன்றாக்கி முப்புரி நூலணிந்த, இரு பிறப்பாளர்களாகிய அந்தணர்கள், ஈரம் உலரா ஆடையுடன், தலை மீது கைக்கூப்பி, ஆறெழுத்து மந்திரமான' சரவண பவ 'என்பதன் பொருளடங்கிய வேதங்களைப் பாடி, நறுமணம் மிக்க மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பர்.  இப்பாடல் மூலம் யாகம் செய்யும், பூணூல் அணியும் ப்ராமணர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்ததையும், சரவண பவ என்று மந்திரங்களைச் சொல்லி முருகப்பெருமானை வணங்கினர் என்பதையும் அறியமுடி

சங்கத்தமிழ்_த்ரிபுரசம்ஹாரம் - 40

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 40 புறநானூறு பாடல் எண்- 55, வரிகள் (1-5) ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி  பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த  கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்  பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல சங்கக்காலத் தமிழரிடம் புராணக் கதைகள் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தன. பாண்டியன் நன்மாறனை இவ்வாறு போற்றுகிறார் புலவர்  ' மலையை (மேரு மலையை) வில்லாகவும், பாம்பை (வாசுகிப் பாம்பை) நாணாகவும் ஒரே கணையைக் கொண்டு மூன்று கோட்டை அசுரர்களையும், வீழ்த்தி தேவர்களுக்கு வெற்றியைத் தந்தவனும்,  நீலக் கறையுடைய கழுத்து உடையவனுமான சிவபெருமானின் பிறை போன்ற அழகிய நெற்றியிலிருக்கும் கண்ணைப் போன்ற சிறப்பு வாய்ந்தவன் என்கிறார். இதிலிருந்து பண்டைய தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் செல்வாக்கு பெற்றிருந்ததை அறிய முடிகிறது. 

சங்கத்தமிழ்_காட்டும்_சிவவழிபாடு - 39

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 39 சங்கக்காலத் தமிழர் சிவபெருமானைப் போற்றினர். முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. புறநானூறு பாடல் எண்-91 வரிகள் (5-7) பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே இப்பாடல் ஔவையார் அதியமானைப் போற்றிப் பாடியது . பால் போன்ற வெண்ணிறம் உடைய பிறையினைச் சூடியவனும் , பிறையினைப் போன்ற நெற்றி உடையவனும் , நீல நிற கழுத்தை உடையவனுமான சிவபெருமானைப் போல் உன் புகழும் நிலைபெறட்டும் என்று அதியமானைப் போற்றி ஔவையார் பாடியது. இதிலிருந்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் சிவபெருமானை இன்று நாம் வணங்கும் உருவில் தான் சங்கத்தமிழரும் வணங்கினர், இடையே வந்த ஆரியப் புரட்டு என்று எதுவுமில்லை.

சங்கத்தமிழில் கிருஷ்ண பலராமன் -38

Image
சங்கத்தமிழ்_காட்டும் _சனாதனதர்மம் -38 புறநானூறு பாடல் 58 வரிகள் 14-16 பால்நிற உருவின் பனைக்கொடி யோனும், நீல்நிற உருவின் நேமியோனும், என்று இருபெருந் தெய்வமும் உடன்நின் றாஅங்கு , சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் அருகருகே அமர்ந்திருந்த கோலத்தைக் கண்ட புலவர்  'பால் போன்ற வெண்ணிறம் உடைய பலராமனும் நீலநிறம் உடைய கிருஷ்ணாவும் அருகருகே அமர்ந்து இருப்பது போல உள்ளது என்கிறார் . இதிலிருந்து  நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் பலராமனும் , கண்ணனும் தமிழரின் ஆதி தெய்வங்கள், திருமாலின் அவதாரங்களான இருவரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பெருந்தெய்வங்களாகவே இருந்துள்ளனர். 

சங்கத்தமிழில் மாலும் மன்னவனும்-37

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-37 புறநானூறு பாடல் 57 வரிகள் 1-3 "வல்லார் ஆயினும் , வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற" அதாவது வலிமை உடையவர், வலிமை இல்லாதவர் என்று பேதம் பார்க்காது தன்னைப் புகழ்ந்தோர் அனைவரையும் ஆதரித்துப் காப்பவன் பாண்டியன் நன்மாறன் ஆவான். அவனது இத்தகைய குணம் தன் பக்தர்களிடம் எவ்வித வேற்றுமையும் காட்டாமல், தன்னை நம்பினோரைக் காக்கின்ற திருமாலின் குணத்தை ஒத்ததாய் உள்ளது என்கிறார் புலவர். அதாவது இறைவன் முன் பக்தர்கள் அனைவரும் சமம். பக்தன் பாமரனா , பண்டிதனா , செல்வந்தனா , வறியவனா என்று பகவான் பார்ப்பது இல்லை. அதற்குச் சிறந்த உதாரணம் இன்றும்  இவ்வளவு செல்வம் குவியும் திருப்பதியில் எம்பெருமானுக்கு மரபுப்படி மண்சட்டியில் வைத்த தயிர்சாதமே முக்கிய நைவேத்யம் ஆகும். இதன்மூலம் சங்கத்தமிழரது கடவுட் கொள்கை இன்றுள்ளது போன்றே அன்றும் இருந்தது என்று துணிந்து கூறலாம். 

சங்கத்தமிழ்_காட்டும்_கிருஷ்ணலீலா - 36

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் -36 சங்க இலக்கியத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகள் ப அகநானூறு பாடல் 59 வரிகள் (4-6) வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த "மாஅல்" போல, இப்பாடலில் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியை ஆறுதல் படுத்துகிறாள் தோழி. இங்கே உவமை கூற வரும் இடத்தில் கண்ணனின் லீலையை விளக்குகிறாள். கண்ணன் யமுனை நதிக்கரையில் கோபிகைகளின் ஆடைகளை மறைத்து வைக்கிறான். பின்பு அவர்கள் கெஞ்சிக் கேட்க ஆடைகளை தருகிறான். கண்ணனது லீலைகள் அக்காலத்திலேயே தமிழகம் வரை பரவிய இருந்தன என்பதற்கு இதுவே சான்று.  இந்த நிகழ்வு உண்மையில் மறைபொருளை உடையதாகும். இங்கே கண்ணன் பரமாத்மா, கோபிகைகள் பரமாத்மாவின் ஒரு துளியாகிய ஜீவாத்மா ஆனால்    அந்த ஜீவாத்மாக்கள் பாசம், பந்தம் லௌகிக இன்பங்களைத் தன் ஆடையாக தரித்துள்ளது. அதை பரமாத்மா தன் அருளால் நீக்க முற்படுகிறது. ஆனால் ஜீவாத்மா லௌகிக இன்பங்களில் திளைத்து அவற்றிலிருந்து விடுபட விரும்பாது தன் மாய ஆடையை கேட்கிறது (கோபிகைகள் உடையைக் கேட்டது போல்). இந்த போலி ஆடையைத் தூக்கி எறியாதவரை ஜீவன் முக்தி அடைவத

சங்கத்தமிழ்_காட்டும்_புராணச்செய்தி - 35

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 35 சங்கக்காலத் தமிழ் மக்களிடம் மிகுதியாக புராணக் கதைகள் வழங்கி வரப்பெற்றன. அவ்வப்போது புலவர்களின் உவமைகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டன. பின்வரும் பாடலில் வரும் புராண உவமை சம்ஸ்கிருத ஸ்ரீமத் பாகவத புராணத்திலேயே காணப்படாத அரிய தகவலாகும். இதன்மூலம் தமிழர்கள் புராணங்களை ஆதரித்தனர் என்ற உண்மை புலப்படும் புறநானூறு பாடல் 174 வரிகள் (1-5) அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பை கொள் பருவரல் தீர கடுந்திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு. திருக்கண்ணன் எனும் சோழ அரசன் சோழ மரபை மீட்டெடுத்த செய்தியைப் பாடவந்த புலவர் அவனை திருமாலோடு ஒப்பிடுகிறார். அன்றொரு நாள் தேவாசுர யுத்தம் வரவே, இரவும் பகலும் அவர்கட்கு இடையூறுசெய்யவே, அசுரர்கள் ஞாயிற்றை மறைத்து வைத்தனர், உயிர்கள் துன்புற்றன. அதனால், காக்கும் கடவுளான நாராயணன் அசுரரை அழித்து ஞாயிற்றை மீட்டெடுத்து நிறுவினார். அதைப் போல இருண்ட காலத்தில் சோழ மரபை மீட்டெடுத்தவன் திருக்கண்ணன் ஆவான்.

சங்கத்தமிழ்_காட்டும்_காதல் தெய்வம்- 34

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 34 சங்கத்தமிழரின் காதல் கடவுள் யார்? இதோ விடை கலித்தொகை - பாடல் எண் 108 இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார் நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி; மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன், சூள். பொருள் தன் காதலியைப் பார்த்துக் காதலன் சொல்கிறான், "அழகிய என் காதலியே உனக்கு இணையான பெண் இன்னொருத்தி எனக்கில்லை, உன்னையே நான் காதலிக்கிறேன், நீ வருந்தாதே, இது உண்மை என்பதை 'மலைபோன்ற உறுதியான அழகிய மார்பினை உடைய திருமாலின் திருவடிகளை தலையில் வைத்து, இருகைகளால் தொட்டு சூளுரைக்கிறேன் என்கிறான். நாம்   அறிந்துகொள்வது யாதெனின் சூளுரைத்து உறுதி செய்வது என்பது இன்றளவும் இந்துக்களிடையே காணப்படும் பண்பாகும், இன்றளவும் கிராமங்களில் இறைவன் மீது உண்மையாக என்று சூளுரைத்து நிரூபித்தல்  நடைமுறையில் உண்டு. இது அக்காலத்திலிருந்தே இருந்த வழக்கமாகும். இங்கு தலைவன் திருமால் மீது சூளுரைக்கிறான்.திருமாலே அன்று முதல் இன்றுவரை பாரத தேசத்து மக்களுக்குக் காதல் தெய்வமாக இருக்கிறான். காதல் என்றவுடன் நினைவுக்கு வருவது 'ராதா கிருஷ்ணன

சங்கத்தமிழில் ஏறுதழுவுதல் -33

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-33 சங்கத்தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் வழங்கப்பட்டுவந்தனவா? பார்ப்போம் கலித்தொகை -103 வது பாடலில் வரும் வரிகள் மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல் மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு! இந்த பாடல் ஏறுதழுவும் வீரனை வர்ணிக்கின்றது. தோழியானவள் தலைவியிடம் இளம் காளையினை தழுவுகின்ற உன் நாயகனைப் பார். அன்றொரு நாள் கம்சனால் ஏவப்பட்ட 'கேசி' எனும் குதிரை வடிவில் வந்த அசுரனை வாய் பிழந்து கொன்றழித்த கண்ணன் கூட இவ்வாறு தான் வீரத்தை வெளிப்படுத்தினானோ? என்று தலைவனது வீரத்தையும், அழகையும் திருமாலோடு ஒப்பிடுகிறாள். இதன்மூலம் நாம் அறிவது யாதெனின் புராணங்கள் ஆரிய பிராமணர்களால் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட புரட்டுகளல்ல.. கிருஷ்ணனைப் பற்றிய புராணங்கள்  தமிழ்மண்ணில் காலம்காலமாக வழங்கி வந்தவையே! சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இராமன், கிருஷ்ணன் முதலியோரைப் புகழும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் தமிழரது ஏறுதழுவும் கலாசாரத்தின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றது. மேலும் கிருஷ்ணனும்

சங்கத்தமிழ்_காட்டும்_கோவில் வழிபாடு - 32

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 32 இன்று எப்படி தமிழரிடத்தே விரதம், திருக்குளத்தில் நீராடுதல், மணியடித்தல், துளசி சாற்றுதல், இறை திருநாமத்தைச் சொல்லி ஆரவாரித்தல் என  ஆலய வழிபாடும், இறை நம்பிக்கையும் உள்ளனவோ ,அனைத்துமே 2000 வருடங்களுக்கு முன்னரே சங்கக்காலத்திலிருந்தே இருந்துள்ளன. இடையில் வந்த ஆரிய கலாசாரம் என்றோ, சங்கத்தமிழர் நடுகல்லை மட்டுமே வணங்கினர் என்றோ திராவிட புராணங்கள் இனியும் பாட இயலாது. சங்கக்காலத்தில் இறை வழிபாடு எப்படி இருந்தது? பதிற்றுப்பத்து- 31 வரிகள் (1-10) குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்குக கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்பத் தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக் வண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய் அலங்கம் செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர குன்றுகளால் சூழப்பட்டு, கடலை ஆடையாக உடுத்தியது இந்த நிலம். இங்கே திருமால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இருகரங்களைத் தலைமேல் சுமந்து, தங

சங்கப்புலவர்களின் கோத்ரங்கள்

Image
சங்கப்புலவர்களின் கோத்ரங்கள் கோத்ரம் என்பது ஒருவருடைய ரிஷி முதல்வனைக குறிக்கும். கௌன்டில்ய கோத்ரம் என்பதை கவுணியன் என்பது குறிக்கும் - புலவர் மதுரைக் கவுணியன் பூதத்தனர். காஷ்யப கோத்ரம் - காசிபன் கீரன் கௌசிக கோத்ரப் புலவர்கள் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பெருங் கௌசிகனார் கௌதம கோத்ரம் - பாலைக் கௌதமனார் ஆத்ரேய கோத்ரம் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் கள்ளில் ஆத்திரையனார் வாதூல கோத்ரம்- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் சாண்டில்ய கோத்ரம் - கடம்பனூர் சாண்டில்யர் இதைத் தவிர சில வடமொழிப் பெயர்களை உடைய புலவரும் உள்ளனர். தாமோதரனார், கேசவனார், கோவர்தனர், பிரமசாரி, நல்லுருத்திரனார். மேலும், ஆரியன் பெருங்கண்ணன் ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன் இப்பெயர்களில் ஆரியன் என்பது ஆராயத்தக்கது சங்கப்புலவர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி சங்கப் புலவர் அகரவரிசை 1) அகம்பன் மாலாதனார் 2) அஞ்சியத்தை மகள் நாகையார் 3) அஞ்சில் அஞ்சியார் 4) அஞ்சில் ஆந்தையார் 5) அடைநெடுங்கல்வியார் 6) அணிலாடு முன்றிலார் 7) அண்டர் மகன் குறுவழுதியார் 8) அதியன் விண்ணத்தனார் 9) அதி இளங்கீரனார் 10) அம

சங்கத்தமிழ்_காட்டும்_வேதநெறி -31

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-31 வேதங்கள் பல்வேறு தெய்வங்களைப் போற்றினாலும், அத்தெய்வங்கள் அனைவரும் ஒன்றே, ஒரே தெய்வீக அம்சத்தின் பல்லவேறு வெளிப்பாடுகள் என்ற கொள்கையை மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றன. நம் சங்கத்தமிழ் புலவர்கள் இதை கொள்கையை இவ்வாறு பாடியுள்ளனர். பரிபாடல் - திருமால்வாழ்த்து பாடல்- 3 வரிகள் 1- 10 தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், திதியின் சிறாரும், விதியின் மக்களும் மாசில் எண்முரும், பதினொரு கபிலரும் தாமா இருவரும், தருமனும் மடங்கலும், மூவேள் உலகமும்,உலகினில் மன்பதும், மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தோம் மாயா வாய்மொழி உரைதர வலந்து! பொருள்- நீர், தீ உள்ளிட்ட பஞ்ச பூதங்களும், சூரிய, சந்திரனாகிய இரு சுடர்களும், அறம்-பொருள்-இன்பமும், ஐந்து கோள்களும்- செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களும், திதி, அதிதியின் புத்திரர்களான தேவர்களும், அசுரர்களும், குற்றமற்ற அஷ்ட வசுக்களும், பதினொரு ருத்திரர்களும், இரு அஷ்வினி குமாரர்களும், தர்மதேவன் ஒருவனும், மூன்று ஏழான இருபத்தொரு லோகங்களும், இவ்வுலகில் வாழும் அனைத்து உயி

முதலாம் ஆர்யபடர்

Image
முதலாம் ஆர்யபடர் உலக அறிவுத் துறையின் வளர்ச்சிக்கு பாரதப் பல்கலைக்கழகங்களே அடித்தளமிட்டன. இந்திய அறிவியல் அறிஞர்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் ஆர்யபடரே. முதலாம் ஆர்யபடர்-( காலம்- கி.பி 476- 550).மிகச் சிறந்த வானியல் மற்றும் கணிதவியலாளர். இவர் பிறப்பிடம் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன... எனினும் திருவாஞ்சிகுளம் (இன்றைய கேரளத்தில் உள்ளது) ஊரைச் சேர்ந்த தமிழரென்றும் கூறுவர். இவரே பூஜ்யத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு வழிகாட்டியவர். இவர் நாளந்தா பல்கலைக்கழகத்திற்குத் தலைமை தாங்கினார். பீகாரில் தரேகனா என்னும் இடத்திலுள்ள சூரியனார் கோவிலில் கோளரங்கத்தை (planetarium) நிறுவினார். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கணித முறைகளான arithmetic ,algebra, plane trigonometry, spherical trigonometry, continued fractions, quadratic equations ,table of signs ஆகியவற்றுக்கு அடித்தளமிட்டவர் இவரே. பூமி தன்னைத் தானே சுற்றும் உண்மையையும், கிரகணம் ஏற்படும் காரணத்தையும் விஞ்ஞானப் பூர்வமாக கூறியவர்.    தொழில்நுட்பங்கள் வளராக் காலங்களிலேயே ஒரு நாள் என்பது 23- மணி நேரம், 56-நிமிடம்,4.1 -நொ

பக்திமணக்கும்_தமிழ்மண்-2

Image
பக்திமணக்கும்_தமிழ்மண்-2 500 வருடம்  இளையவர்  அண்ணன்? ஆண்டாளுக்கு அண்ணன் ராமானுஜர் எப்படி? ஆண்டாளின் 'வாழித் திருநாமப்பாட்டு', 'பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' என்கிறது. அதாவது ராமானுஜருக்கு ஆண்டாள் தங்கையாம்!!! இதில் அதிசயம் என்னவென்றால் ஆண்டாள் வாழ்ந்தது 7ம் நூற்றாண்டு, ராமானுஜரது காலமோ 12ம் நூற்றாண்டு. ஆக, ராமானுஜர் ஆண்டாளை விட 500 வருடம் இளையவர்!! பின் எப்படி அண்ணன் ஆனார்? பார்ப்போம். ஒருமுறை ஆண்டாள் அழகர்கோவில் திருமாலுக்கு 'நூறுதடா வெண்ணெய்யும், நூறு தடா அக்காரவடிசிலும்' தருவதாக நேர்த்திக்கடன் செய்திருந்தாள், ஆண்டாள் நாராயணனோடு இணைந்துவிட்டாள், அதற்குப் பிறகு அந்த நேர்த்திக்கடனை யாரும் செலுத்தவில்லையாம். 500 வருடங்கள் கழித்து வந்த ராமானுஜர் இதை நினைவில் கொண்டு திருமாலிஞ்சோலை அழகனுக்கு ஆண்டாளின் சார்பாக நேர்த்திக் கடனைச் செய்தார். பின்னர் ராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றபோது அவரை எதிர்கொண்டு ஆண்டாளே 'அண்ணனே_வருக' என வரவேற்றார்.இதனால் ராமானுஜருக்கு 'கோயில் அண்ணர்' என்ற மரபும் வந்தது. தந்தையில்லா இடத்தில

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image
மேஷ ராசியில் சூர்யபகவான் உச்சம் பெறுகின்ற மாதம் (மேஷ ஸங்கராந்தி) சித்திரையே அதனால் தமிழர்களுக்கு சித்திரை முதல்நாளே புத்தாண்டு. சோழர்கள் ஆட்சி செய்த அகண்ட பாரத தேசத்தின் பல பகுதிகளில் சித்திரை தான் புத்தாண்டு. வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் புத்தாண்டை பார்ப்போம். கேரளாவில் விஷூ (vishu) வட பாரதத்தில், சீக்கியர்களுக்கு வைஷாகி (vaishaki) ஒரிசாவில் விஷ்வ ஸங்கராந்தி (vishwa sankaranthi) வங்காளத்திலும், வங்கதேசத்திலும் பொஹேளா பொய்ஷாக் (pohela boishakh) அசாமில் ரங்காலி பிஹு (rongali bihu) நேபாளத்தில் பிக்ரம் ஸம்வத் (bikram sanwat) இலங்கையில் அலூத் அவ்ருத்து (aluth avuruthu) பர்மாவில் திங்க்யான் (thingyan) லாவோஸ் நாட்டில் சோங்கான், பி மாய் லாவோ (songkan/ pi mai lao) கம்போடியாவில் சோள் சிநாம் த்மேய் (chol chnam thmey) தாய்லாந்தில் ஸங்க்ரான் (songkran) இதில் குறிப்பிடத்தக்கது யாதெனின் இவை அனைத்தும் அகண்ட பாரத தேசத்தின் பகுதிகளே!! மேலும் சங்கராந்தி என்பதே பலவாறாக திரிந்துள்ளதை இங்கு காணலாம். அனைவருக்கும் அகண்ட பாரத தேசத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சங்கத்தமிழில் ஸ்வர்க நரகம் -30

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-30 சங்கக்காலத்திலிருந்தே தமிழர்களிடம் சுவர்க்கம், நரகம் பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன என்பதற்கு இப்பாடலே சாட்சி. புறநானூறு-195 கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்; பொருள்: சான்றோரைப் பார்த்துப் புலவர் கூறுகிறார், ' முதுமையை எட்டிவிட்ட நீங்கள் நல்வினை செய்யுங்கள், மரணத்தருவாயில் உங்கள் உயிரைப் பறிக்க கொடுமையான ஆயுதங்களை உடைய எமன் வருவான் அப்போது வருந்தி என்ன பயன்? இப்போதே நல்வினைகளை ஆற்றுங்கள், அல்லது தீவினை செய்வதையாவது நிறுத்துங்கள் என்கிறார். நாம் அறிந்து கொள்வது: இந்து புராணங்களின் படி யமன் அஷ்டதிக் பாலர்களில் ஒருவன், மரணத்தின் அதிபதி. தீயவர்களின் உயிரைப் பறிக்க வருபவன் ஆவான். இந்த நம்பிக்கை சங்ககால்தது தமிழனிடத்தே இருந்தது, ஆகவே தீய செய்கைகள் செய்யக் கூடாது என்ற உயர்ந்த சனாதனதர்மக் கருத்துக்களைப் பின்பற்றினான். புராணங்கள் அனைத்தும் ஆரியப் புரட்டு என புறந்தள்ளுவோர்க்கு சங்கத்தமிழர் எமனை நம்பிய செய்தி அதிர்ச்சியைத் தரும் என

சங்கத்தமிழ்_காட்டும்_கர்மவினை -29

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-29 சனாதனதர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று கர்மவினைக் கோட்பாடு ஆகும். ஒரு மனிதன் இப்பிறவியில் செய்த நன்மையும், தீமையும் அவனைத் தொடர்ந்து வரும், மறுபிறவியிலும் அதற்கேற்ற பலன்கள் வந்தடையும் என்பதே அக்கொள்கை ஆகும்.  அதனால் தான் பாவம் சேர்க்காமல், புண்ணியம் சேர்க்க வேண்டும் என நம் முன்னோர் வலியுறுத்தினர். இக்கருத்து சங்கக்காலம் முதலே தமிழகத்தில் இருந்து வந்தது என்பதை இப்பாடல் மூலம் அறியலாம். புறநானூறு- 134 இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அலன்; பிறகும் சான்றோர் சென்ற நெறியென ஆங்கும் பட்டன்று அவன் கைவண்மையே. இப்பாடலில் புலவர் ஆய் அண்டிரனை இவ்வாறு புகழ்கிறார்... இந்த பிறவியில் செய்த புண்ணியம், மறு பிறவியல் உதவும், என்றாலும் நீ அதற்கு ஆசைப்பட்டு ந்னமைகள் செய்பவனல்ல மாறாக சான்றோர்கள் செல்லுகின்ற வழியை அப்படியே பின்பற்ற நடப்பவன் என்பதாலேயே நல்வினைகளைச் செய்கிறாய். நாம் அறிந்து கொள்வது: தமிழர் பழங்காலத்திலிருந்தே இம்மை, மறுமை எனும் பல பிறவிக் கொள்கையை உடையவர்கள், ஆகவே தமிழர் சமயம் சனாதனதர்மமே! ஆக, சனாதனதர்ம வழியில்

சங்கத்தமிழ் பரசுராம அவதாரம்- 28

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 28 சனாதனதர்மத்தின் படி எம்பெருமான் ஒன்பது அவதாரங்கள் எடுத்து அதர்மத்தை அழித்தார் என்பது உண்மையாகும். இதில் பசுரராம அவதாரம் பற்றிய செய்தி அகநானூற்றில் உள்ளது. அகநானூறு பாடல்-220 (வரி 5-9) மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின் அருங் கடி நெடுந்தூண் போல. பொருள்: மன்னர் பரம்பரைகளை அழித்து ஒழித்த மழுவினை உடைய பரசுராமர், முற்காலத்தில் இங்கே (செல்லூர் எனும் ஊரில்) பெருமுயற்சி செய்து வேள்வி செய்தார். அப்போது மிக உயர்ந்ததும், கயிற்றால் கட்டப்பட்டதுமான அழகிய யாகத்தூணை நிலைநிறுத்தினார், காவல் காக்கப்பட்ட அத்தூணை காண்பதே அரிது, அது போன்றது தலைவியின் அழகு என்று பாடல் கூறுகிறது. நாம் அறிந்துகொள்வது: நெடியோன் என்பது திருமாலைக் குறிக்கும், அதிலும் அதர்மம் செய்த க்ஷத்ரிய மன்னர் குலத்தை வேரோடு சாய்த்த மழு எனும் கோடரியை ஆயுதமாக உடையவர் பரசுராமரே, தமிழ்நாட்டில் செல்லூர் எனும் ஊரில் அவர் வந்து யாகம் செய்தார் என்று கூறுவதன் மூலம் பசுரராம அவதாரம் உண்மை என்று சங்கப்புலவர் ஏற்கின்றனர்

சங்கத்தமிழில் ராமாவதாரம்-27

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-27 சனாதனதர்மத்தின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க இதிஹாசங்கள் உதவின. இறைவனே மனிதனாக அவதரித்து மாந்தர் வாழ்வதற்கான நெறியைக் காட்டினார். அதுவே இராமாயணம் ஆகும். கம்பருக்கு முன்பே ராமகாதை தமிழகத்தில் ப்ரபலமாக இருந்திருக்கின்றது. மேலும் இராமகாதை உண்மையான வரலாறே என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த சங்கப்புலவன் இவ்வாறு பாடுகிறான். வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே  (அகநானூறு 70: 13-17). அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒலி செய்து தொந்திரவு செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற அமைதியை நகரம் அடைந்தது. இதன்மூலம் ஸ்ரீராமன் வாழந்ததும், வானர சேனையோடு தனுஷ்கோடி வந்ததையும்,

சங்கத்தமிழில் மஹாபாரதம்-26

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-26 மஹாபாரதம் சனாதனதர்மத்தின் மிக முக்கிய இதிகாசமாகும், உலகின் மிகப் பெரிய காவியமும் ஆகும். அது நடந்தது உண்மையா? ஆம், ஆதாரம் புறநானூற்றில் உள்ளது. புறநானூறு-2 (13-16). அலங்குளை புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம்பதின்மரும் பொருது, களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய். என்று இப்பாடல் உதியன்சேரலாதனின் ஈகைக் குணத்தைக் கூறுகிறது. அதாவது ஐவராகிய பாண்டவரும், ஈரைம்பது- நூறு கௌரவரும் போர் செய்த பாரதப் போரில், அப்பெரும் படைக்கு உணவைச் சேரலாதன் தந்துள்ளான். அது பற்றியே அவனுக்குச் 'சேரமான் பெருஞ்சோற்று உதியன்சேரலதன்' எனும் பெயரும் கிடைத்துள்ளது. மேலும் புறநானூற்றின் கடவுள் வாழ்ததுப் பாடியவர் பெருந்தேவனார் ஆவார். தமிழில் முதன்முதலில் மஹாபாரதத்தை இயற்றியதால் இவரை 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்று அழைப்பர். இவற்றின் மூலம் மஹாபாரதம் நடந்தது உண்மையே என்பதும், அதில் தமிழ் மன்னர்களது பங்கும் இருந்தது என்பதும் உணரப்படுகிறது.

பக்திமணக்கும்_தமிழ்மண்-1

Image
கண்ணனுக்கே கண்திருஷ்டி கழித்த மதுரைக்காரர் ஆறாம் நூற்றாண்டில் கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர் 'பெரியாழ்வார்' எனும் 'விஷ்ணு சித்தர்' ஆவார். ஒருமுறை வல்லபதேவ பாண்டியன் எது சிறந்த சமயம் என்ற வாதத்தை வைக்கவே, பெரியாழ்வார் வாதத்தில் வென்று வைஷ்ணவத்தின் சிறப்பை மதுரை மண்ணில் நிலைநாட்டினார். அரசர் அவரை கௌரவிக்க பட்டத்து யானைமீது ஏற்றி பவனி வரச்செய்ய அப்போது நாராயணன் கருடவாகனத்தில் பெரியாழ்வாருக்குக் காட்சி தரவே, எம்பெருமானின் அழகில் மயங்கி , அவனுக்குக் கண் திருஷ்டி பட்டுவிடக் கூடாதென கண்ணேறு கழித்தார். அதுவே திருப்பல்லாண்டு பாடல்.  " பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு    பலகோடி நூறாயிரம்    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்    சேவடி செவ்வித்திருக்காப்பு. இறைவனுக்கே கண்திருஷ்டி கழித்த மதுரைப் பாண்டிய மண்ணின் மாண்பை என்னவென்பேன். மதுரைக்காரன் என்பதில் பெருமை.

சங்கத்தமிழ்_காட்டும்_வர்ணாஸ்ரமம்-25

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-25 சனாதனதர்மம் காத்து நின்ற தமிழ் வேந்தர்கள். புறநானூறு பாடல் 6 (16-20) பணியியர் அத்தை நின் குடையே; முனிவர் முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே! இறைஞ்சுக, பெரும நின்சென்னி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! பொருள்- எதிரிகளுக்கு முன் உனது வெண்கொற்றக் குடை பணியாது, ஆனால் முக்கண்ணனாகிய சிவபிரானது கோவிலை வலம்வரும்போது மட்டும் நின் குடை பணியும், யார் முன்னும் வணங்கா நின் தலையானது மறை ஓதும் அந்தணர் முன்னர் மட்டும் வணங்கும் என்று காரிகிழார் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றுகிறார். நாம் அறிந்துகொள்வது. சனாதனதர்மத்தில் மன்னனுக்கு உயரிய இடமுண்டு என்றாலும், அவன் தெய்வ நம்பிக்கை கொண்டவனாகவும், தெய்வத்தை மதிப்பவனாகவும், நான்கு மறைகளான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் கற்ற முனிவரையும் , அந்தணரையும் வணங்கி, அவர் சொற்படி நடக்க வேண்டும். இதை முதுகுடுமிப் பெருவழுதி செவ்வனே செய்து போற்றத்தக்கவன் ஆனான். இதன்மூலம் தமிழர்கள் தம் கடவுளுக்கும், நான்கு மறைகளுக்கும் தந்த உயரிய இடம் புலனாகிறது.

சங்கத்தமிழ்_காட்டும்_பாரதவர்ஷம்-24

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-24 பாரதம் ஆண்ட பாண்டிய மன்னன். புறநானூறு-6 பாடல் (1-7) வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரையொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது ஆனிலை உலகத் தானும் ஆனாது. என்று காரிகிழார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழ்கிறார். அதாவது பனிபடர்ந்த இமயத்தை வடக்கேயும், தெற்கே குமரியையும், கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையுமே எல்லையாக்க கொண்ட இப்பெருநிலத்தை (பாரத தேசத்தை) ஆள்கின்ற மன்னவா நின் புகழ் நீர் சூழ் இவ்வுலகிலும், ஆனிலை உலகமாகிய மேலுலகிலும் பரவியுள்ளது. நாம் அறிந்துகொள்வது. பாண்டிய மன்னன் பழங்காலத்தில் பாரத தேசத்தையே ஒரு குடையின் கீழ் ஆண்டுள்ளான். இது ஆராயத்தக்க கருத்தாகும். அவ்வாறு புறநானூற்றுப் புலவன் கூறவது உண்மையாயின் புறநானூற்றின் காலம் மிகப்பழையதாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட பாரத தேசம் என்பது தமிழரால் மிகப்பழங்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பாரததேச்ததை ஆண்ட பாண

சங்கத்தமிழ்_காட்டும்_யுத்த தர்மம்-23

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-23 புறநானூறு பாடல் -9 (1-5) ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என போர் செய்வதற்கு முன்னர் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பசுக்களையும், பார்ப்பனர்களையும், பெண்களையும், நோயாளிகளையும், நீத்தார் கடன் செய்ய மகனைப் பெறாதவர்களையும் பாதுகாப்பான இடம் செல்லுமாறு சொல்கிறான். அதாவது மேற்கூறியோர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்பதால் அவர்களைத் தாக்காத பெருமையை உடையவன் பாண்டியன் மன்னன் என புகழ்கிறார் நெட்டிமையார் எனும் புலவர். நாம் அறிந்துகொள்வது. சங்கக்காலத்திலிருந்தே பசுக்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன, ஆக்களைக் கொல்வது பாவமென்றே அவற்றைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியுள்ளனர். பசுக்களைப் போன்ற சாதுவான குணமும், பிறர்க்குத் தீங்கறியா மனமும் உடையவர்கள் என்பதால் பார்ப்பனர் காப்பதும் மன்னரின் கடமையே, இது சங்கக்காலத்துத் தமிழன் அறத்திற்கும், அந்தணர்க்கும் தந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. மேலும

சங்கத்தமிழில் சூரசம்ஹாரம்-22

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-22 சனாதனதர்மத்தில் விழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அதிலும் தீமைகளின் உருவகமான அசுரர்களைத் தெய்வங்கள் வென்ற நாட்களும் கொண்டாடப்படுகின்றன. நரகாசுரனை வென்ற நாள் தீபாவளி என்றால் சூரனை முருகன் வென்ற நாள் சூரசம்ஹார விழாவாகும். சூரனை முருகன் வென்ற வரலாறு அகநானூற்றில் 59வது பாடலில் உள்ளது. ..' சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்     சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து...' அதாவது திருபரங்குன்றத்தை 'சூரனை வென்ற முருகன் சினம் தணிந்து எழுந்தருளிய இடமென்று' சங்கநூல் அகநானூறு கூறுகிறது. ஆக, அசுரர்களைத் தமிழர் எனக் கூறுவதே ஏற்புடையதல்ல. மேலும் சனாதனதர்மமானது பாரத தேசம் முழுவதும் ஒன்றுபோலவே பரவி இருந்தது. முருகனைப்பற்றி வடமொழி புராணங்களான 'ஸ்கந்தபுராணம்', 'வாயுபுராணம்' முதலிய புராணங்கள் கூறும். மஹாபாரத வனபர்வத்தில் ஸ்கந்தன் எனும் முருகனின் வரலாறு கூறப்படுகிறது. முருகனின் வரலாற்றை காளிதாசர் வடமொழியில் 'குமாரசம்பவம்' எனும் நூலாக இயற்றினார். குப்தர் காலத்தில் முருக வழிபாடு வட இந்தியாவில் ப்ரபலம். குமாரக

சங்கத்தமிழில் ஹோலிப் பண்டிகை -21

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-21   holi festival in sangam literature   காமன்பண்டிகை_எனும்_ஹோலி     சனாதனதர்மமானது இன்றளவும் பல்வேறு இன்னல்களைக் கடந்து நிற்பதற்குக் காரணம்... சனாதனம் என்பது வாழ்வியல் நெறியாக இருப்பதே ஆகும். வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கொண்டாடி, மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாக மாற்றியே சனாதனதர்மம் இன்றளவும் நிலைத்துள்ளது. காமம் என்பதும் காதல் என்பதும் மனித வாழ்வின் முக்கிய அம்சமே ஆகும். தமிழர்கள் இவற்றை கொண்டாடவே செய்தனர். பல்வேறு கோவில்களில் காம சிற்பங்களைக் கடந்தே உள் செல்கிறோம். ஏனெனில் இவற்றைக் கடந்தாலே நாம் வீடுபேறு பெற இயலும். பங்குனி மாத பௌர்ணமி காமன் (மன்மதன்) விழாவாக, பங்குனி முயக்கமாக சங்கத்தமிழன் கொண்டாடினான். அன்றைய காதலர் தினம் அது.  இதனை சோழநாட்டினர் பங்குனி விழாவாகவும் சேரநாட்டினர் உள்ளி விழாவாகவும் கொண்டாடினர் என்பதை “கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே” - (நற்றிணை: 234: 6 - 8) என நற்றிணை சொல்கிறது. உறையூர்ப் பங்குனி விழா ஊ

சங்கத்தமிழில் அருந்ததி -20

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் -20 sangathamil kaatum sanathana dharmam. sanathana dharma in sangam literature. THE SCIENTIFIC FACTS ABOUT ARUNTHATHI STAR. அருந்ததி வசிஷ்டர் பார்ப்பதன் அறிவியல் சனாதனதர்மமானது சங்கக்காலத் தமிழரின் வாழ்வியலில் வேரூன்றி, இன்றும் பாரம்பரியம் மாறாமல் எழுந்து நிற்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் இப்பாடல். புறநானூறு-122 பாடியவர்-கபிலர் பாடப்பட்டவர்- மலையமான் திருமுடிக்காரி கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் றுப்பா கியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை நினதென விலைநீ பெருமிதத் தையே. பொருள்- திருமுடிக்காரியின் நாடு கடலாலும், பகைவராலும் அழிக்க இயலாதது எனினும் வேள்வித்தீ வளர்க்கும் குற்றமற்ற அந்தணர்க்குத் தரப்பட்டதாகும். தம்முடன் இணைய வேண்டுமென்று மூவேந்தரும் தரும் செல்வங்களோ தம் ஈகைக் குணத்தால் இரவலர்க்குத் தரப்பட்டதாகும். இதைத்தவிர காரிக்கு செல்வம், சொத்து உண்